குறிச்சொல்: electricity

சொகுசு வாகனத்திற்கு மின்சாரம் திருட்டு : தனுஷ் தரப்புக்கு அபராதம் விதிப்பு

சொகுசு வாகனத்திற்கு மின்சாரம் திருட்டு : தனுஷ் தரப்புக்கு அபராதம் விதிப்பு

சற்றுமுன், செய்திகள்
மதுரையில் உள்ள தன்னுடைய குடும்ப குலதெய்வ கோவிலுக்கு தனுஷ் சென்றிருந்த போது, அவரின் சொகுசு வாகனத்திற்கு மின்சாரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா, தாய், சகோதரர் செல்வ ராகவன், சகோதரிகள், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் மதுரை தேனி மாவட்டம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டார்.அப்போது ஓய்வு எடுப்பதற்காக ஒரு கேரவான் என அழைக்கப்படும் சொகுசு வாகனமும் அங்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அந்த சொகுசு வாகனத்திற்கு ஊராட்சி தெருவிளக்குகளுக்கான மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள், இதுபற்றி மின்சார துறை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர்.  இதன் அடிப்படையில் ஆய்வு செய்த அதிகாரிகள் 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததோடு, அந்த சொகுசு வாகனத்தையும் பறிமுத
தனுஷ்: நேற்று ரூ.80 லட்சம் நன்கொடை, இன்று 7000 வாட்ஸ் மின்சாரம் திருட்டு

தனுஷ்: நேற்று ரூ.80 லட்சம் நன்கொடை, இன்று 7000 வாட்ஸ் மின்சாரம் திருட்டு

சற்றுமுன், செய்திகள்
நடிகர் தனுஷ் நலிந்த விவசாயிகள் 125 பேர்களுக்கு தலா ரூ.50000 என சுமார் 80 லட்சம் நிதியுதவி செய்தார் என்று நேற்று வெளிவந்த செய்தி அவரது இமேஜை ஒரேயடியாக உயர்த்தியது. அனைவரிடமும் பாராட்டு பெற்ற விஜய் இன்று 7000 வாட்ஸ் மின்சாரம் திருடியதாக ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். தனுஷ் தனது சொந்த ஊருக்கு இன்று குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது குடும்பத்தின் தேவைக்காக ஒரு கேரவனும் சென்றுள்ளது. இந்த நிலையில் அந்த கேரவனுக்கு திருட்டுத்தனமாக ஊர்பொது மின்சார கம்பத்தில் இருந்து 7000 வாட்ஸ் மின்சாரம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு புகார் செல்ல அதிகாரிகள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கேரவன் டிரைவருக்கு ரூ.15760 அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.