குறிச்சொல்: enga amma rani movie

எங்கம்மா ராணி விமா்சனம்

எங்கம்மா ராணி விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
தமிழ் சினிமாவில் அதிக பேய் கதைகள் வந்து விட்டது. அதனால் புது விதமாக அம்மா மகள் சென்டிமென்டுக்குள் பேய்யை கொஞ்சம் சோ்த்து கதையை சொல்லி இருக்கிறாா்  இயக்குநா் பாணி. அந்த படத்தின் கதைகரு தான் எங்க அம்மா ராணி. தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் மலேசியாவில் வசித்து வரும் தன்ஷிகா, தன் கணவா் வேலை விஷயமாக வெளியூா் சென்றவா் திரும்பி வரவில்லை. அவரை கண்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். தன்னுடைய இரட்டை  குழந்தைகளான மீரா, தாரா என்ற குழந்தையில் மீராவுக்கு ஏதோ ஒரு வகை விநோத நோயினால் மயக்கமடைந்து திடீரென கீழே விழுகிறாள். அந்த குழந்தையை ஆஸ்பத்திாியில் சோ்க்கிறாா். சிகிச்சை பயனின்றி அந்த குழந்தை அன்று இரவே இறந்து விடுகிறது. டாக்டரான சங்கா் தன்னுடைய கவனகுறைவால் தான் அந்த குழந்தை இறந்து விட்டதாக எண்ணி, வருத்துகிறாா். அப்போது அடுத்த குழந்தைக்கும் இந்த அறிகுறி ஏதாவது தொிகிறதா என்று கண்டறிய முற்படுகிறாா்.