ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: kaala

இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க!!! “

இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க!!! “

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் பணிகள் தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் சற்றுமுன்னர் 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தனது டுவிட்டரில் 'காலா' திரைப்படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த டீசரில் “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வசன வரியையும் அவர் பதிவு செய்துள்ளதால் டீசருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 'கபாலி' படத்தில் நான் வந்துட்டேன்னு சொல்லு' என்ற பஞ்ச் போல் இந்த பஞ்ச்சும் பற்றியெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்

ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14 வினாடிகள் மட்டுமே அடங்கிய அந்த லீக் வீடியோவில் ரஜினிகாந்த் தன்னை அடிக்க வரும் வில்லன் ஒருவரை, உதைப்பது போன்றும் அதன் பின்னணி நெருப்பு எரிவது போன்றும் உள்ளது. காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டீசர் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இணையத்தில் லீக் ஆன காட்சி தயாரிப்பாளர் தனுஷை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காலா ரிலீஸ் தேதி தனுஷ் அறிவிப்பு

காலா ரிலீஸ் தேதி தனுஷ் அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
இயக்குநா் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை 7மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தனது ட்வீட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவருடைய ரசிகா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கபாலி படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநா் பா.ரஞ்சித் மற்றும் ரஜினி கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் படம் காலா. இந்த படத்தை தனுசின் வெண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2.0 படம் வெளியான பிறகு தான் 2.0 படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதால் காலதாமதம் ஆகிற காரணத்தால் முன்னாடியே காலா படம் வெளியாக இருக்கிறது. . ஏற்கனவே காலாபடம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி புத்தாண்டுக்கு வெளிவர அதிகவாய்ப்பு இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் தனுஷ் ட்விட்டரில் காலா படத்தின் அதிகாரப்பூா்வ ரிலீஸ் தே
டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி

டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் துவங்கியது. கபாலி வெற்றிப் படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். நடிகர் தனுஷ் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் பதிவு செய்து வருகிறார். தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ செகண்ட்லுக்

இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ செகண்ட்லுக்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தின் செகண்ட் லுக் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிட போவதாக நடிகர் தனுஷ் அறிவித்த நிலையில் சில நொடிகளுக்கு முன்னர் இந்த செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமான, ஆவேசமான முகத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடியுடனும் நரையுடன் கூடிய தாடியுடனும் கூடிய ரஜினியின் இந்த ஸ்டில் வெளியான மறு வினாடியில் இருந்தே வைரலாகிவிட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சினிரிப்போர்ட்டர்ஸ் சார்பில் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பிறந்த நாள் ஸ்பெஷல்

ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பிறந்த நாள் ஸ்பெஷல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு தனுஷ் ஒரு பிறந்த நாள் விருந்தாக 'காலா' படத்தின் செகண்ட் லுக்கை வெளியிடவுள்ளார் ஆம், இதுகுறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த நிலையில் செகண்ட்லுக்கை வரவேற்க இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படம் '2.0; திரைப்படம் வெளியான பின்னர் வரும் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://twitter.com/dhanushkraja/status/940234399399919616
இணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்

இணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்

சற்றுமுன், செய்திகள்
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி இணைந்து ‘காலா’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறது. மும்பை தாதாவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் தொடங்கி, சென்னை, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி தனது குடும்பத்தோடு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான போதும் சமூக வலைத்தளத்தில் அதிகமான வரவேற்பு இருந்தது. அதேபோல், இந்த புகைப்படத்துக்கும் நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘காலா’ படத்தில் ஹுமா குரேஷி, சமுத்திரகனி, அஞ்சலி பாட்டீல், நானா படேகர், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண
நதிகளை பாதுகாக்கவேண்டியது எல்லோருடைய கடமை: ரஜினிகாந்த்

நதிகளை பாதுகாக்கவேண்டியது எல்லோருடைய கடமை: ரஜினிகாந்த்

சற்றுமுன், செய்திகள்
நதிகளை இணைப்போம் பாரதம் காப்போம் இயக்கம் சார்பில் இந்தியா முழுவதும் நதிகள் இணைப்புக்கான விழிப்புணர்ச்சி கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் இருந்து இமய மலை வரை நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பேரணியும் நடத்தபடுகிறது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட விழிப்புணர்வு பிரசாரக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சி வாழ்த்துக் கூறும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். அதில், ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது.
தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லையே என்ற மன உளைச்சலில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவுக்கு நினைவேந்தல் ஒன்றை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, அமீர், பா.ரஞ்சித், பிரம்மா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ராம்,  மீரா கதிரவன் உள்ளிட்ட பல இயக்குனர்களும் மேலும் பல உதவி இயக்குனர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விழாவில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திய வேலூர் சி.எம்.சி. கல்லூரி நிர்வாகத்துக்கு இயக்குனர் அமீர் நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘சாதிகள் தற்போது ஒழிந்து வருகின்றன. இதனால், சாதிகள் இல்லாத சமூகத்தை நாம் அடைந்து வருகிறோம். சாதிகளை கலைந்து தமிழராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழன் என்பதில் நாம் பெருமிதம்
தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம் என இவரது பட வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். இந்த படங்களில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்பதை கீழே பார்ப்போம். தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். மூன்று பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பாகம் மட்டுமே இரண்டரை மணி  நேரம் ஓடக்கூடியதாக இருக்குமாம். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே இந்த படம்தான் அவருடைய சிறந்த படமாக இருக்கும் என்று கூறுகின்றனர். தனுஷ் நடிக்கவிருக்கும் மற்றொரு படமான  ’மாரி-2’ படத்தை முதல் பாகத்தை