ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Kalaipuli S Thanu

கோச்சடையானை நேரடியாக எடுத்திருந்தால் பாகுபலியை மிஞ்சியிருக்கும்: கலைப்புலி எஸ்.தாணு

கோச்சடையானை நேரடியாக எடுத்திருந்தால் பாகுபலியை மிஞ்சியிருக்கும்: கலைப்புலி எஸ்.தாணு

சற்றுமுன், செய்திகள்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கலைப்புலி தாணு மற்றும் தனுஷ் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்நிலையில், கலைப்புலி எஸ்.தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, ‘கோச்சடையான்’ படத்தை அனிமேஷனாக இல்லாமல் நேரடியாக எடுத்திருந்தால் பாகுபலியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்திருக்கும். சௌந்தர்யா ரஜினிகாந்த் திறமையையும், தனித்துவத்தையும் பார்த்து நான்தான் அவரை படம் இயக்குமாறு கேட்டுக் கொண்டேன். இந்த படத்திற்கு பிறகு சௌந்தர்யாவுக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைக்கும் என்றார். ‘கோச்சடையான்’ படம் முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வெளிவந்த படம். இந்திய சினிமாவ