குறிச்சொல்: kamal hassan

கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் இரண்டு முதல்வர்கள்

கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் இரண்டு முதல்வர்கள்

சற்றுமுன், தமிழகம்
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவித்துவிட்டு, கட்சியின் கொடியையும் ஏற்றி சிறப்புரை ஆற்றவுள்ளார் இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு இரண்டு முதல்வர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாமவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். இருவருமே பாஜக எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் மட்டுமின்றி மேலும் சில முன்னாள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளும் இன்றைய கமல் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
‘மெர்சலின் இந்த சாதனையை யாராவது உடைக்க முடியுமா?

‘மெர்சலின் இந்த சாதனையை யாராவது உடைக்க முடியுமா?

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஒன்றல்ல, இரண்டல்ல, 30க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்துள்ளது. இந்த அனைத்து சாதனைகளையும் இன்னொரு படம் உடைக்குமா? என்பது சந்தேகமே. மெர்சலின் சாதனைகள் குறித்து தற்போது பார்ப்போமா! தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது . டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது . தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. *அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங் *மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங் *அதிக அளவ
கமல்ஹாசனை முருகனாக மாற்றிய பிரபல நடிகை

கமல்ஹாசனை முருகனாக மாற்றிய பிரபல நடிகை

சற்றுமுன், சின்னத்திரை
நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவாளர் என்பதும், கடவுளை நம்ப மறுப்பவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கடவுளை வணங்குபவர்களை அவர் ஒருபோதும் விமர்சனம் செய்ததில்லை. ஏனெனில் அவரது மகள் ஸ்ருதியே ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர் இந்த நிலையில் சன் டிவியின் தொகுப்பாளினியும், டிவி தொடர் நடிகையுமான ஐஸ்வர்யா பிரபாகர், கமல்ஹாசனை முருகன் போன்று வரைந்து அதை அவரிடம் காட்டி ஆட்டோகிராப் கேட்டுள்ளார். தன்னுடைய உருவத்தை முருகன் மூலம் ரசித்து பார்த்த கமல்ஹாசன் சிரித்தபடியே ஆட்டோகிராப் போட்டுள்ளார். இதனை நடிகை ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
ஹார்வர்டு பல்கலையில் கமல் பேசியது என்ன?

ஹார்வர்டு பல்கலையில் கமல் பேசியது என்ன?

சற்றுமுன், செய்திகள்
வரும் 21ஆம் தேதி தமிழகத்தில் அரசியல் கட்சியை தொடங்கவிருக்கும் கமல்ஹாசன் நேற்று ஹார்வர்டு பல்கலைகழகத்தில் உரையாற்றினார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கமல் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு இதோ: பாரம்பரியம், கலாச்சாரம், மூத்தமொழியான தாய்த்தமிழ் கட்டடகலையின் முன்னோடி சமூகநீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி என பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். வெவ்வேறு விதமான கிராமங்களை உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதில் எனக்குப் பெருமை உண்டு. ஆனால் தற்போது அங்கே அனைத்தும் சீராக இல்லை, இன்னும் காலம் கடக்கக் கூடாது என்ற தொலைநோக்கோடு உறுதியான குறிக்கோளோடு புத்துலகம் காண வேண்டுமென விரைவில் அரசியல் பயணம் புறப்படவிருக்கிறேன். என்னுடைய உண்மையான நோக்கம் சாதாரண நிலையிலுள்ள தமிழகத்தின் நிலையை மாற்றிக் கா
கமல்ஹாசனுக்கு பின்னர் ‘தேவர்’ டைட்டில் படத்தில் கவுதம் கார்த்திக்

கமல்ஹாசனுக்கு பின்னர் ‘தேவர்’ டைட்டில் படத்தில் கவுதம் கார்த்திக்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றும் வகையில் அந்த படம் இருந்ததாக ஒருசிலர் விமர்சித்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு 'தேவர்' பட டைட்டிலில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இவர் அதே சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் டைட்டில் தான்'தேவர் ஆட்டம். இந்த படத்தின் டைட்டிலில் ஜாதி இருந்தாலும் இதுவொரு பொழுதுபோக்கு படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சி: கமல்ஹாசன் அறிவிப்பு

பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சி: கமல்ஹாசன் அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும், தனது சுற்றுப்பயணத்தை ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கவிருப்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கஇருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்
என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சமீபத்தில் விகடன் அறிவித்தது. இந்த விருது விழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது வழங்கும் விழாவில் விகடன் விருதினை நடிகர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இந்த விருதினை வழங்கிய பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, 'தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் இல்ல இதோட நிக்கபோறதும் இல்ல. பல கலைஞர்கள் விருது வாங்கும் மேடையில் என் தம்பியும் விருது வாங்குவது மிக மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் இதே மேடையில் வரும் 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், சுற்றுப்பயண விபரங்களை வரும் 18ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
கமல் ஆதரித்த முதல்வரின் லட்சணம் இதுதான்

கமல் ஆதரித்த முதல்வரின் லட்சணம் இதுதான்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் தமிழக ஆளும் அரசை குறை கூறுவது போல் கேரள அரசை புகழ்வதிலும் வல்லவர். கேரளாவில் இருந்து தினந்தோறும் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டு கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்க தெரியாத கமல், ஓணம் பண்டிகைக்கு கேரள முதல்வரின் வீட்டுக்கே சென்று விருந்து சாப்பிடுவார் இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் தமிழகத்தை மட்டுமின்றி கேரளாவையும் பதம் பார்த்தது. ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகையில் உள்ள பணத்தை முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்த காரியத்திற்காக பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆட்சி மீது வேறு எந்த குற்றம், குறையும் சொல்ல முடியாததால் இதனை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரை பாராட்டாத விஐபிக்களே இல்லை என்று கூறலாம் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமிதாப்பச்சன், ஷாருக்கான், உள்பட பலர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர் இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் நேற்று பகல் முழுவதும் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தது கமல், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் கமல் தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து டுவீட்டில் கூறியதாவது: சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்
கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஸ்ருதிஹாசன் லண்டன் நகரை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், தாய் சரிகாவிடம் காதலரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சியில் காதலருடன் வருகை தந்திருந்த ஸ்ருதிஹாசன், அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சன் ஆகிய மூவரும் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.