குறிச்சொல்: kamal

காவிரி போராட்டம்: வழக்கம்போல ஆப்செண்ட் ஆன அஜித்

காவிரி போராட்டம்: வழக்கம்போல ஆப்செண்ட் ஆன அஜித்

சற்றுமுன், செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும்,ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். தமிழர்கள் நலனுக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் வழக்கம்போல டிமிக்கி கொடுத்தார். பொதுவாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத அவர் தமிழர்களுக்கான போராட்டத்தில் கலந்துகொள்ளாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அழைப்பு விடுத்தால் தூத்துக்குடி செல்ல தயார்! கமல் அதிரடி

அழைப்பு விடுத்தால் தூத்துக்குடி செல்ல தயார்! கமல் அதிரடி

சற்றுமுன், செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் போராட்டக்களம் அழைத்தால் நான் வருவேன் என்று தூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீா் பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனா். இந்த போராட்டம் 42வது நாளை கடந்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விழப்புணா்வு பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டடு. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாம் அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. இது தொடா்பாக மதுரைக்கிளையில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தஉயா்நீதிமன்றம் ஸ்டெர்லைட்டுக்க
இந்தியன் 2 படத்தில் விவேகம் வசனகர்த்தா

இந்தியன் 2 படத்தில் விவேகம் வசனகர்த்தா

சற்றுமுன், செய்திகள்
  கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு செப்டம்பர் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் வசனகர்த்தாவாக கபிலன் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் நிலையில் அவருடன் இணைந்து கபிலன் வைரமுத்துவும் வசனம் எழுத உள்ளார் கபிலன் வைரமுத்து ஏற்கனவே அஜித்தின் விவேகம் மற்றும் கே.வி.ஆனந்தின் கவண் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது!

இந்தியன் 2 படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது!

சற்றுமுன், செய்திகள்
கமல் அரசியல் கால் வைத்து தனது கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். இதற்கிடையில் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வரூபம் 2 இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குநா் ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார் கமல். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கயுள்ளது. ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி மாவட்ட வாரியாக தொண்டா்களை சந்தித்து வந்தார். கமலும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்படி ரஜினியும்,கமலும் அரசியல் பணிகளுக்கிடையில் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனா். இவா்கள் நடிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும் என பேச படுகிறது. ரஜினியின் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந
பெண்களிடம் நாட்டை ஒப்படைக்க தயார்: கமல்ஹாசன்

பெண்களிடம் நாட்டை ஒப்படைக்க தயார்: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று சென்னையில் மகளிர் தின சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சியில் மரணம் அடைந்த உஷாவிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அறிவித்த கமல், பேசியதாவது: அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும். பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது. மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும். மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து நேர்மையாக எடுக்கும் முடிவு. எந்த ஒன்றையும் நடுவில் இருந்து பார்த்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும். மய்யம் என்பது தராசின
என்னால் மக்களுக்கு கூட அடிமையாக இருக்க முடியாது: சத்யராஜ்

என்னால் மக்களுக்கு கூட அடிமையாக இருக்க முடியாது: சத்யராஜ்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகினர் அரசியலுக்கு வருவதுதான் தற்போதைய ஹாட் டாக். கமல், ரஜினி, டி.ராஜேந்தரை தொடர்ந்து விஜய், விஷால் உள்பட இன்னும் பலர் அரசியல் பாதையை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சினிமாவில் சூடான அரசியல் கேரக்டர்களில் நடித்தவரும், பல அரசியல் மேடைகளில் பேசியவருமான நடிகர் சத்யராஜ் தான் அரசியலுக்கு ஏன் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது: எனக்கு ஓட்டு அரசியல் என்பதில் விருப்பமில்லை. என்னால் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது. மக்களுக்கு கூட என்னால் அடிமையாக இருக்க முடியாது. மனதில் என்ன தோணுகிறதோ அதை பேசுகிறேன், அதையே ரசிக்கின்றேன். என்னுடைய கேரக்டரே இதுதான் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சத்யராஜ் நடித்த 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
எடப்பாடியை விட 3 லட்சம் அதிகம்: கமல் காட்டிய அதிரடி

எடப்பாடியை விட 3 லட்சம் அதிகம்: கமல் காட்டிய அதிரடி

சற்றுமுன், தமிழகம்
நடிகர் கமல்ஹாசன் அவர்களின் அரசியல் கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் மகளிர் தின பொதுக்கூட்டம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றி வரும் கமல்ஹாசன் நேற்றிரவு போக்குவரத்து காவல்துறை அதிகாரி காமராஜ் என்பவரால் தாக்கப்பட்டு பலியான உஷா என்ற கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கு 'மக்கள் நீதி மய்யம்' கட்சி ரூ.10 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரணம் அடைந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பை விட கமல்ஹாசனின் நிதியுதவி அறிவிப்பு ரூ.3 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  
ரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் நயன்தாரா

ரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். இந்த நிலையில் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ஷங்கர் படம், அஜித்-சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் உண்மையென்றால் ஒரே நேரத்தில் 4 முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை நயன்தாராவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
ராஜாவுக்கெல்லாம் பதில் சொல்லி எனர்ஜி வேஸ்ட் செய்யாதீங்க: கமல் வேண்டுகோள்

ராஜாவுக்கெல்லாம் பதில் சொல்லி எனர்ஜி வேஸ்ட் செய்யாதீங்க: கமல் வேண்டுகோள்

சற்றுமுன், செய்திகள்
பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பெரியார் சிலை குறித்து பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க செய்துவிட்டது. பாஜகவின் மேலிட அழுத்தம் காரணமாக அவர் அந்த பதிவை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு குறித்த பதிவுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு கமலின் இந்த டுவீட்டில் எல்லா சிலையும் என்றால் சாமி சிலையும் சேர்த்தா? என்று ஒருசிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு கமல் விரைவில் விளக்கம் அளிபபார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவுடன் அமெரிக்கா டூர்: புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் அமெரிக்கா டூர்: புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

சற்றுமுன், செய்திகள்
தென்னந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் டோரா,அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அறம் படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடா்ந்து அனைத்து படங்களும் இப்படி தான் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் நயன். தற்போது கோலமாவு கோகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாக அதிகமான லைக்ஸ் பெற்றது. நயனின் இரு காதல்கள் ஏற்கனவே தோல்வியை தழுவியது. தற்போது நயனும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இவா்கள் இதை வெளிப்படைாக சொல்ல இல்லை என்றாலும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பிப்ரவரி காதலா் தினத்தை முன்னிட்டு நயனும் விக்னேஷ் சிவனும் கைகோர்த்தபடி ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தனா். இந்நிலையில் ஆஸ்கார் விருது நடைபெறும் அமெரிக்க