குறிச்சொல்: Kanimozhi

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

சற்றுமுன், செய்திகள்
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது. முதலில் தீர்ப்பில் சாரம்சத்தை வாசித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்தார். எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம், சரத்ரெட்டி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த தீர்ப்பால் தமிழகம் முழுவதிலும் உள்ள திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீர்ப்பு வெளியான சில நொடிகளில் சென்னை அறிவாலயத்தில் கூடியிருந்த திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
7 கிலோ எடை குறைத்து சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆகும் சோனா

7 கிலோ எடை குறைத்து சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆகும் சோனா

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட்டில் ஹிரோயின் ஆகும் கனவோடு வந்து தோற்றுப் போன நடிகைகள் ஏராளம். அவர்களில் சோனாவும் ஒருவர். இவர் தேடிவந்த ஹீரோயின் கனவு நிறைவேறாவிட்டாலும், நிறைய படங்களில் கவர்ச்சி நடிகையாக வந்துபோனார். அதுமட்டுமில்லாமல், குத்து பாடல்களுக்கும் கவர்ச்சி நடனம் ஆடி, தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இன்றும் வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ‘கனிமொழி’ என்ற படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அந்த படம் மூலம் இவருக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமானது. இதில் சோர்ந்துபோன சோனா, தனது செயற்கை நகை விற்கும் கடையையாவது பெரிய அளவில் கொண்டுவர முயன்றார். ஆனால், அதிலும் அவருக்கு தோல்வி ஏற்பட, துவண்டு போனார். கடந்த சில வருடங்களாக உடல் பருமன் காரணமாக அவதிப்பட்டு வந்து சோனா, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தியானம், சிகிச்சை என எல்லாவற்றையும் மேற்கொண்டு சுமார் 7 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம