குறிச்சொல்: Kannada

நயன்தாரா இடத்தை திடீரென பிடித்த சமந்தா

நயன்தாரா இடத்தை திடீரென பிடித்த சமந்தா

சற்றுமுன், செய்திகள்
கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று 'யூ-டர்ன். பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொலை ஒன்றை துப்பு துலக்கும் த்ரில் காட்சிகள் இந்த படத்தின் சிறப்பு அம்சம் இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதாகவும், இந்த படத்தை 'சைத்தான்' இயக்குனர் பிரதீப் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் சமந்தா ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘புலி’ பட வில்லன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘புலி’ பட வில்லன்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் டிவி வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது புதிய பங்கேற்பாளர்களும், வீட்டை விட்டு வெளியே போன பழைய பங்கேற்பாளர்களும் ரீஎண்ட்ரி ஆகி வரும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடவில்லை இந்த நிலையில் கன்னடத்தில் நான்கு பாகங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் கன்னடம் அடுத்த மாதம் முதல் ஐந்தாவது பாகம் வெளிவரவுள்ளது. இதை விஜய்யின் 'புலி' பட வில்லன் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கவுள்ளார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் கன்னடம் முதலாவது மற்றும் நான்காவது பாகங்களை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்குள் நுழைவதற்காகத்தான் நடிக்கவே வந்தேன்: பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

அரசியலுக்குள் நுழைவதற்காகத்தான் நடிக்கவே வந்தேன்: பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

சற்றுமுன், செய்திகள்
கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் உபேந்திரா. கன்னடத்தில் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சத்யம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கப்போவதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அரசியலில் இறங்குவது குறித்து தனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தார்களோடு கலந்துபேசித்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது,  சிறுவயதில் இருந்தே எனக்கு அரசியலில் ஈர்ப்பு அதிகம். எனவே, அரசியலுக்கு வரும் எண்ணத்தில்தான் நடிக்கவே வந்தேன். சிறு வயதில் நான் சொன்ன கருத்துக்களை யாரும் ஏற்கவில்லை. எனவே, சமுதாயத்தில் பெரிய ஆளாக இருந்தால்தான் நாம் சொல்வது எடுபடும் என்பதை புரிந்துகொண்டுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அரசியலில் இறங்குவது குறித்து நண்பர்கள் மற்றும்
எல்லா மாடுகளும் மணியடிக்க கூடாது: கமல்

எல்லா மாடுகளும் மணியடிக்க கூடாது: கமல்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த அளவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கும் என்று விஜய் டிவியே எதிர்பார்த்திருக்காது. இந்த நிகழ்ச்சி குறித்து புதிய தலைமுறை உள்பட தொலைக்காட்சிகளில் விவாதம் செய்யும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிவதாகவும், இதனால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கமல் உள்பட அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது என்பதை நேற்று பார்த்தோம். இதற்கு தற்போது பதிலளித்துள்ள கமல்ஹாசன், 'இந்தியில் இந்த நிகழ்ச்சி 11 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்திலும் ஒளிபரப்பாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது என்பதால் தமிழில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது புகார் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கலாச்சாரம் மட்டும் த
மன்னிப்புக்கு பதிலாக மண்ணை தின்னுங்கள். கன்னடர்களுக்கு எதிராக  விஜய் ஆவேசமா?

மன்னிப்புக்கு பதிலாக மண்ணை தின்னுங்கள். கன்னடர்களுக்கு எதிராக விஜய் ஆவேசமா?

சற்றுமுன்
நடிகர் சத்யராஜை மன்னிப்பு கேட்க செய்ய கடந்த சில நாட்களாக கன்னட அமைப்புகள் போராடி வருகின்றன. இல்லையேல் பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என எச்சரித்து வரும் நிலையில் படத்தின் வியாபாரம் கருதி இன்று சத்யராஜ் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டார். இத்துடன் இந்த பிரச்சனை அனேகமாக முடிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஜய் இதுகுறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக ஒரு செய்தி டுவிட்டரில் உலாவி வருகிறது. அதில், 'கன்னடர்களை எச்சரிக்கிறேன். சத்யராஜ் எனக்கு தந்தை போன்றவர். மன்னிப்புக்கு பதிலாக மண்ணை அள்ளி திண்ணுங்கள் என்று கூறியதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் இது விஜய் கூறியதே அல்ல. ஆர்வக்கோளாறில் விஜய் ரசிகரோ, அல்லது மாட்டிவிட வேண்டும் என்பதற்காக அஜித் ரசிகரோ செய்த வேலை இது என்று தெரியவந்துள்ளது. இந்த உண்மை தெரியாமல் விஜய்தான் இவ்வாறு கூறியதாக கன்னட ஊடகங்கள் கொளு
சினிமா வாய்ப்பு – இளம்பெண்ணிடம் அத்து மீறிய தயாரிப்பாளர் கைது

சினிமா வாய்ப்பு – இளம்பெண்ணிடம் அத்து மீறிய தயாரிப்பாளர் கைது

பிற செய்திகள்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய கன்னட சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 2004ம் ஆண்டு வெளியான ‘ப்ரீதிமாயே ஹுஷாரூ’ என்ற கன்னட படத்தை தயாரித்தவர் விரேஷ். இவரிடம் ஒரு இளம்பெண் சினிமா வாய்ப்பு கேட்டுள்ளார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக விரேஷ் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், கடந்த புதன் கிழமை அந்த இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது விரேஷ் அங்கு சென்றுள்ளார். அவரிடம் சினிமா பற்றி பேச தொடங்கிய விரேஷ், மெல்ல மெல்ல அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியான அந்த பெண், அவரிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே ஓடி, கதவை மூடி தாழ்பாள் போட்டு விட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்த அப்பெண்ணின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் விரே