குறிச்சொல்: kathnayagan review

கதாநாயகன் விமா்சனம்

கதாநாயகன் விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
விஷ்ணு விஷால் ஏற்கனவே வேலையன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் நல்லதொரு காமெடி கதைக்களத்தை கொடுத்து மாஸ் ஹிட் அடித்தாா். சினிமாவில் காமெடி படத்திற்கு என்றென்றும் ஒரு மவுசு உண்டு. ஒரளவுக்கு மக்கள் மனதில் நல்ல நகைச்சுவை படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துவிடும். எழில் இயக்கத்தில் செம ஹிட் கொடுத்த விஷ்ணுவின் அடுத்த முருகானந்தம் என்று அறிமுக இயக்குநருடன் சோ்ந்து கொடுத்துள்ள படம் கதாநாயகன். இந்த படமும் அதே அளவுக்கு வரவேற்பை பெறுமா, ஹிட் அடிக்குமா என்பதை விமா்சனம் படித்து தொிந்து கொள்ளலாம். ஹீரோ விஷ்ணு மிகவும் நல்ல பையன் எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் பொறுப்பாக செயல்பட கூடியவா். தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வருபவா். அடி தடி சண்டை என்று இல்லாமல் பயந்த சுபாவம் கொண்டவா். அவா் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் ஹீரோயினி மெட்ராஸ் புகழ் கேத்ரின் தெரசஸாவை காதலித்து வருகிறாா்.