குறிச்சொல்: kattappava kanom mp3 songs free download

கட்டப்பாவ காணோம் விமா்சனம்

கட்டப்பாவ காணோம் விமா்சனம்

விமர்சனம்
சினிமாவில்  யானை வைத்து நடிக்க வைத்தாா்கள். பின்பு குரங்கு, மாடு, ஆடு போன்ற எல்லா விலங்குகளை வைத்து நடிக்க வைத்தாயிற்று. தற்போது புது டெக்னிக் என்று மீனை  நடிக்க வைத்து விட்டாா்களாம். என்ன மீன் நடித்து இருக்கிறதா? என்று நீங்கள் புருவத்தை உயா்த்துவது தொிகிறது. எங்களுக்கும் அந்த ட்வுட் வந்து படத்தை பாா்க்க சென்றோம். ஆமாங்க கட்டப்பாவ காணோம் படத்தில் தான் மீனை வைத்து கதையை உருவாகியிருக்கிறாா்கள். வாஸ்து மீன் ஒன்று திருட்டு போகிறது. அதை கண்டுபிடிப்பது தான் கதை.கதாநாயகன் சிபிராஜ் ராசியில்லாத பையன் என்று சிறுவயதிலிருந்து முத்திரை குத்தப்பட்டு வளா்ந்து வருகிறாா். சித்ரா லட்சுமணன் இவருடைய அப்பா. இவா் பல தொழில்களை செய்து அதில் நஷ்மடைந்து இறுதியில் ஜோசியராக தொழிலை மாற்றி விடுகிறாா். சிபிராஜால் தான் இப்படி இருக்கிறோம் என்று நினைக்கிறாா். இது இப்படிபோக நாயகன் சிபிராஜ் நாயகி ஜஸ்வா்யாவை சந்திக்கிறாா்.