குறிச்சொல்: keerthy suresh

இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் யாருக்காவது தெரியுமா?

இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் யாருக்காவது தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
நேற்று இளையதளபதி விஜய்யை இயக்குனர் பார்த்திபன் நேரில் சந்தித்து தனது மகள் கீர்த்தனாவின் திருமண அழைப்பிதழை கொடுத்தார் என்பதும், இந்த சந்திப்பின்போது விஜய்யின் தாயார் ஷோபா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய், ஷோபா, பார்த்திபன் உள்ள இந்த புகைப்படத்தில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஒரு பெயிண்டிங் உள்ளது. இந்த பெயிண்டிங்கில் 'என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்... பல கோடி ரசிகைகளில் ஒருத்தி' என்ற வாசகமும் உள்ளது. இந்த பெயிண்டிங்கை தனது கையாலே வரைந்து விஜய்யின் 43வது பிறந்த நாளின்போது பரிசளித்தவர் நடிகை கீர்த்திசுரேஷ் என்பது தான் இந்த புகைப்படத்தின் ரகசியம்
சென்னையில் 30, கொல்கத்தாவில் 60: விஜய் 62 படத்தின் மாஸ்டர் பிளான்

சென்னையில் 30, கொல்கத்தாவில் 60: விஜய் 62 படத்தின் மாஸ்டர் பிளான்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் பூஜை சற்றுமுன்னர் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று முதல் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. மேலும் சென்னையில் 30 நாட்களும், கொல்கத்தாவில் 60 நாட்களும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் செப்டம்பருக்குள் முடித்துவிட்டு இவ்வருட தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், கீர்த்திசுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்
தானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்

சற்றுமுன், விமர்சனம்
நடிகர்கள்: சூர்யா, கீர்த்திசுரேஷ், கார்த்திக், சுரேஷ்மேனன், ரம்யாகிருஷ்ணன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இசை அனிருத் ஓளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன்.பி சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகனான சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவலகத்தில் உயரதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு, பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். சிபிஐ தலைமை அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன், ரெய்டு நடத்திய இடத்தில் லஞ்சம் வாங்குகிறார். இதனை கவனிக்கும் தம்பி ராமையா, சுரேஷ் மேனனைப் பற்றி தலைமை அலுவலகத்துக்கு மொட்டக் கடிதாசி அனுப்புகிறார். இதையறிந்த சுரேஷ் மேனன், தம்பி ராமையா மீதான கடுப்பில் சிபிஐ தேர்வில் பங்கேற்கும் சூர்யாவை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். திறமை இருந்தும் வேலை கிடைக்காத வருத்தத்தில் சூர்யா மனம் நொந்து போக, மறுபுறத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனுக்கும் போலீஸாகும் வாய்ப்பு மறுக்
கீர்த்திசுரேஷை மிரட்டினாரா நயன்தாரா?

கீர்த்திசுரேஷை மிரட்டினாரா நயன்தாரா?

சற்றுமுன், செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனருக்கும் கீர்த்திசுரேஷுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு கிளம்பியுள்ளது. ஆனால் நயன்தாராவுடன் காதலில் இருக்கும் விக்னேஷ் சிவன் தரப்பு இதனை மறுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு காதல் தோல்வியை அனுபவித்த நயன்தாரா இந்த கிசுகிசுவால் அதிர்ச்சி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவேதான் நயன்தாரா, கீர்த்திசுரேஷை மிரட்டியதாகவும், அந்த மிரட்டலின் காரணமாகத்தான் கீர்த்தி, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை விக்னேஷை பிரதர், பிரதர் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அரசியல் பயணம் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ செல்லவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, மூவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இதனை அவர் உறுதி செய்தார். இந்த விழாவில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்

விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் 'விஜய் 62' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது. அந்த வகையில் காஜல் அகர்வால், சமந்தாவை அடுத்து மிக குறுகிய இடைவெளியில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் நாயகி பட்டியலில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் இந்த ஆண்டு 'தானா சேர்ந்த கூட்டம், 'மகாநதி, சண்டக்கோழி, சாமி 2 ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்திசுரேஷ் தற்போது விஜய் படத்திலும் இணைந்துள்ளதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக்கை கழட்டிவிட்ட ‘தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழு

கார்த்திக்கை கழட்டிவிட்ட ‘தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழு

சற்றுமுன், செய்திகள்
நவரச நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷின் ''அனேகன்' படத்தில் நடித்தார். அதன் பின் அவர் நடித்துள்ள படம் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் தான் நடித்த பகுதிக்கு நேற்று கார்த்திக் டப்பிங் செய்தார். இத்துடன் இந்த படத்தில் அவரது பணி முடிந்ததால் நேற்று படக்குழுவினர்களுடன் விடைபெற்று கொண்டார் மேலும் இந்த படத்தின் மொத்த டப்பிங் பணியும் முடிந்துவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்
தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்

தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்

சற்றுமுன், தமிழகம்
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்த கீர்த்தி சுரேஷ், இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர்களிடம் இருந்து கனத்த மனதுடன் விலகுகிறேன். இந்த படத்தில் நடித்தது சுகமான அனுபவம் என்று கூறியுள்ளார். மேலும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு கோபத்தில் வெளியேறிய த்ரிஷா…

வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு கோபத்தில் வெளியேறிய த்ரிஷா…

சற்றுமுன், செய்திகள்
       ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது.எனவே, முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுடன், இன்னொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றும், இருவருக்கும் சமமான அளவு முக்கியத்துவம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பலம் ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.      விக்ரம் – கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்டக் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் த்ரிஷா..கதை உருவாக்கத்தில் வேறுபாடு இருப்பதால் விலகுவதாக அறிவித்துள்ள த்ரிஷா, படக்குழுவினருக்கு வாழ
த்ரிஷாவின் திடீர் முடிவு ஏன்? சாமி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி

த்ரிஷாவின் திடீர் முடிவு ஏன்? சாமி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி

சற்றுமுன், செய்திகள்
சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வந்த 'சாமி 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து வெகுவிரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரும், இந்த படத்தின் முதல் பாக நாயகியுமான த்ரிஷா திடீரென படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனக்கு இந்த படத்தில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டும் என்று த்ரிஷா வற்புறுத்தியதாகவும், ஆனால் இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் என்பதால் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் த்ரிஷாவுக்கு கொடுக்க முடியாது என்று ஹரி மறுத்துவிட்டதாலும் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது இருப்பினும் படத்தில் இருந்து விலகினாலும் வெறுப்பை மனதில் வைத்து கொள்ளாமல், படக்குழுவினர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் த்ரிஷா