குறிச்சொல்: kerala

7 வருட ரஜினியின் சாதனையை முறியடித்த ராஜமெளலி

7 வருட ரஜினியின் சாதனையை முறியடித்த ராஜமெளலி

சற்றுமுன், செய்திகள்
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படம் தான் இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த படம் தமிழகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் செய்தது. இந்த சாதனை கடந்த 7 வருடங்களாக எந்த திரைப்படத்தாலும் உடைக்க முடியாத நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2' திரைப்படம் முறியடித்துள்ளது. 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி நேற்று வரை தமிழகத்தில் மட்டும் ரூ.106.70 கோடி வசூல் செய்துள்ளது இதன்மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமான 'எந்திரன்' திரைப்படத்தை 'பாகுபலி 2' பின்னுக்கு தள்ளிவிட்டது. ஏற்கனவே இந்த படம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் நம்பர் ஒன் வசூலை பெற்ற படம் என்ற நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த பெருமையை பெற்றுள்ளது மேலும் 'பாகுபலி 2' திரைப்படம் கேரளாவில் மட்டு
ரூ.50 கோடி வசூல் – கேரளாவில் வரலாறு படைத்த பாகுபலி

ரூ.50 கோடி வசூல் – கேரளாவில் வரலாறு படைத்த பாகுபலி

சற்றுமுன், செய்திகள்
கேரளாவில் வெகு விரைவாக ரூ.50 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை பாகுபலி படம் தட்டிச் சென்றுள்ளது. பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேரளாவில், இந்தப் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. மலையாள படங்களில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான புலிமுருகன் படமே ரூ.50 கோடி வசூல் செய்தது. அதுவும், நிறைய நாட்கள் ஓடிய பின்பே, இந்த வசூலை அந்த படம் எட்டியுள்ளது. ஆனால், அங்கு வெளியான பாகுபலி படம் வெகு விரைவாக ரூ.50 கோடியை வசூல் செய்து வரலாறு படைத்துள்ளது. அதேபோல், பாலிவுட்டில் அமீர்கான் நடித்த தங்கல் படமே ரூ.350 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. அதையும் பாகுபலி மிஞ்சி விட்டது. ஒரு வெளிமாநில மொழி படம், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான பாகுபலி இந்த வெற்றியை பெற்று, கேரள மற்றும் பாலிவுட்காரர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
நீட் தேர்வா? நிர்வாண தேர்வா? மாணவிகளின் உள்ளாடையை கழட்டி சோதனை செய்த அதிகாரிகள்

நீட் தேர்வா? நிர்வாண தேர்வா? மாணவிகளின் உள்ளாடையை கழட்டி சோதனை செய்த அதிகாரிகள்

சற்றுமுன், செய்திகள்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் குற்றவாளிகளை விட கடுமையாக சோதனை செய்து கொடுமைப்படுத்திய சம்பவங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. எல்லாவற்றையும் விட கொடுமையாக மாணவ, மாணவிகள் உள்ளாடையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஒருசில அப்பாவி மாணவிகள் சோதனைகளின் கெடுபிடிகளை பார்த்து, தங்களுக்கு டாக்டர் ஆகும் ஆசையே போய்விட்டதாக வருத்தத்துடன் கூறிய காட்சி அனைவரையும் கலங்க வைத்தது. தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா, இல்லையா? என்பது கடைசி வரை குழப்பமாக இருந்த நிலையில் தேர்வுக்கு முந்தைய நாள்தான் தேர்வுக்கு வரவேண்டியவர்கள் எப்படி வரவேண்டும் என்ற குறிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் மனி