குறிச்சொல்: kodiveeran

அன்புச்செழியனால் ‘கொடி வீரன்’ ரிலீஸ் தேதி மாற்றம்

அன்புச்செழியனால் ‘கொடி வீரன்’ ரிலீஸ் தேதி மாற்றம்

சற்றுமுன், செய்திகள்
பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டல் காரணமாத தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணம் காரணமாக அவர் பணிபுரிந்த 'கொடி வீரன்' ரிலீஸ் தாமதமாகியுள்ளது. கொடிவீரன் திரைப்படம் நாளை அதாவது நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அசோக்குமாரின் திடீர் மறைவினால் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது எம்.முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில்சசிகுமார், மஹிமா நம்பியார், சானுஷா, பாலசரவணன், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொடி வீரன் படத்திற்காக மொட்டை போட்ட நடிகை பூர்ணா..

கொடி வீரன் படத்திற்காக மொட்டை போட்ட நடிகை பூர்ணா..

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் முத்தையா இயக்கும் கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், சினிமா உலகில் அவரால் பெரிதாக புகழ் பெறமுடியவில்லை. இந்நிலையில்தான் அவரைத் தேடி ‘கொடி வீரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. இப்படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். சசியை வைத்து ஏற்கனவே ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூர்ணா ஒரு காட்சிக்காக மொட்டை அடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்ட, அதற்கு உடனே அவர் ஒப்புக்கொண்டாராம். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பூர்ணா “ கொடி வீரன் படத்தில் எனது கதாபாத்திரத்தை கேட்டவ