ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: latha rajinikanth

வாடகை கட்டாவிட்டால் கடையை காலி செய்யுங்கள்: லதாரஜினி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

வாடகை கட்டாவிட்டால் கடையை காலி செய்யுங்கள்: லதாரஜினி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதாரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் டிராவல்ஸ் ஒன்றை கடந்த 25 வருடங்களாக நடத்தி வருகின்றார். இந்த கடைக்கு அவர் வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்த நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், லதாவின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் மாநகராட்சி வாடகையை ஏற்பதா வேண்டாமா என லதா ரஜினிகாந்த் ஒரு மாதத்தில் முடிவு செய்து கடை வேண்டும் என்றால் அதற்கான வாடகைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும் தவறினால் போலீஸ் உதவியுடன் அவரது கடையை மாநகராட்சி நிர்வாகம் காலி செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லதா ரஜினிகாந்த் பள்ளிக்கு பூட்டு போட்டது ஏன்? பரபரப்பு தகவல்

லதா ரஜினிகாந்த் பள்ளிக்கு பூட்டு போட்டது ஏன்? பரபரப்பு தகவல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வந்த பள்ளிக்கு கடந்த சில மாதங்களாக வாடகை கட்டணம் சரிவர கட்டவில்லை என்று பள்ளி கட்டிடத்தின் உரிமையாளர் புகார் கொடுத்ததாகவும், தொடர்ந்து வாடகைப்பணம் செலுத்ததாக காரணத்தினால் பள்ளி கட்டிடத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பள்ளி கட்டிடத்திற்கு சரியான முறையில் வாடகை செலுத்தி வருவதாகவும், வாடகை செலுத்தாததால் பூட்டு போடப்பட்டது என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் லதா ரஜினி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த நிலையில் பூட்டு போட்டதால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் தற்காலிகமாக வேளச்சேரியில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது