குறிச்சொல்: letter

இப்படி செய்யலாமா அஜித். மன்சூர் அலிகான் கடிதம்

இப்படி செய்யலாமா அஜித். மன்சூர் அலிகான் கடிதம்

சற்றுமுன், செய்திகள்
அஜித்தின் 'விவேகம்' படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் பல எழுந்து வந்தபோதிலும் கோலிவுட் திரையுலகினர் அஜித்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். வழக்கம்போல் அஜித் அமைதியாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில் அஜித்துக்கு ஆதங்கத்துடன் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா? மன்சூர் அலிகானின் ஆதங்கத்தை அஜித் ஏற்றுக்கொள்வாரா?
ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை திடுக்கிட வைத்தது. அதனால் அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் ரஜினி உருவபொம்மைகளையும் எரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருசில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒருசில புகார்கள் ரஜினியின் பார்வைக்கு வந்ததால் அவர் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் முலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகி