குறிச்சொல்: Love

அமைச்சர் மகனுடன் சாய்பல்லவி காதலா?

அமைச்சர் மகனுடன் சாய்பல்லவி காதலா?

சற்றுமுன்
'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கும் தெலுங்கு நடிகர் கண்டா ரவிதேஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசு கிளம்பியது. கண்டா ரவிதேஜா திருமணமானவர் என்பதும் 'ஜெயதேவ்' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஆந்திர மாநில கல்வி அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் மகன் ஆவார். இந்த காதல் கிசுகிசுவிர்கு அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "எனது மகனும் சாய் பல்லவியும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் இது போன்ற வதந்திகளை பரப்புவது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.
தொழிலதிபர்களை திருமணம் செய்யும் பிரபல நடிகைகள்

தொழிலதிபர்களை திருமணம் செய்யும் பிரபல நடிகைகள்

சற்றுமுன், செய்திகள்
ஏற்கனவே கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட நிலையில் வரும் மார்ச் 16ஆம் தேதி ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை நடிகை ஸ்ரேயா திருமணம் செய்யவுள்ளார் இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும், மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரேயே திருமணம் செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 32 வயதாகும் காஜலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அவரது தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிடட்து. இந்த நிலையில் மும்பையில் உள்ள இளம் தொழில் அதிபர் ஒருவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் விரைவில் அந்த தொழில் அதிபரை அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு விஷயங்களில் பின்னிப் பிணைந்தது தான் வாழ்க்கை: சுருதிஹாசன்

பல்வேறு விஷயங்களில் பின்னிப் பிணைந்தது தான் வாழ்க்கை: சுருதிஹாசன்

சற்றுமுன், செய்திகள்
சுருதிஹாசனுக்கும் லண்டன் நடிகர் மைக்கேலுக்கும், காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதிய படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- “என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. தயவு செய்து எனது திருமணத்தையும், சினிமாவையும் இணைத்து பேச வேண்டாம். திரையில் உங்களை நீண்ட நாட்கள் பார்க்க முடியவில்லையே.. சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. படங்களில் மட்டும்தான் நான் நடிக்க வேண்டுமா? வேறு வேலைகளே எனக்கு கிடையாதா? எனது வாழ்க்கை சினிமாவுடன் மட்டுமன்றி வேறு நிறைய விஷயங்களோடு பின்னி பிணைந்து இருக்கிறது. எனவே சினிமாவில் நடிக்காமல் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்றும், வேறு வேலைகள் எதுவ
சுஜாவோட காதல் அனுபவத்தை கேளுங்க

சுஜாவோட காதல் அனுபவத்தை கேளுங்க

சற்றுமுன், செய்திகள்
நேற்று உலகெங்கும் காதலர்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காதல் அனுபவம் குறித்து நடிகை சுஜா சொல்வதைக் கேளுங்க. இதுவரை நாங்கள் காதலில் சொதப்பிய சம்பவமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு முறை காதலர் தினத்தை குடும்பத்தோடு கொண்டாடினோம். அதுதான் சொதப்பல் என்று நினைக்கிறேன். எனக்கு வித்தியாசமான விநாயகர் பொம்மைகளைச் சேர்த்து வைப்பது பிடிக்கும் என்பதால் அவர் செம்பருத்தி பூ மேல் விநாயகர் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு பொம்மை கொடுத்தார், அவர் எனக்கு கொடுத்த முதல் பரிசு. நான் அவருக்கு பரிசு கொடுக்க என்னென்னவோ யோசித்து கடைசியில் இரண்டு பறவைகள் சேர்ந்து பறக்கிறது போல் ஒரு பொம்மையை பரிசாக கொடுத்தேன் என்றார்.
திருப்பதியில் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா?

திருப்பதியில் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா?

சற்றுமுன், செய்திகள்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவது தெரிந்ததே. விக்னேஷ் சிவன் இயக்கி வந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நெருங்கிய உறவினர்களுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி கோவிலில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கி வந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கே இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் சற்றுமுன்னர் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இனிதே முடிந்ததாக விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது நண்பர்கள் மற்றும் கோஹ்லி - அனுஷ்கா தரப்புக்கு நெருக்கமான நபர்கள் முன் இந்த திருமணம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விராத்-அனுஷ்கா இருவரும் காதலித்து வந்த நிலையில் இடையில் ஒரு சிறு ஊடல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
திடீர் மணமகளாக மாறிய விஜே மணிமேகலை

திடீர் மணமகளாக மாறிய விஜே மணிமேகலை

சற்றுமுன், செய்திகள்
சன் டிவி புகழ் மணிமேகலை கடந்த சில வருடங்களாக ஹூசைன் என்பவரை காதலித்து வந்த நிலையில், வேற்று மதத்தவரை திருமணம் செய்ய அவரது தந்தை அனுமதிக்கவில்லை இந்த நிலையில் தந்தையின் எதிர்ப்பை மீறி ஹூசைன் உறவினர்கள் மற்றும் தோழிகள் சூழ மணிமேகலை நேற்று திடீரென மாலை மாற்றி மணம் செய்து கொண்டார். தனது திருமணம் குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, 'எவ்வளவு போராடியும் என்னுடைய தந்தையின் மனதை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் என்னுடைய குடும்பத்தை எதிர்த்து இன்று என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றைக்காவது ஒருநாள் என்னுடைய அப்பா எங்களை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்' என்று கூறினார்
கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஸ்ருதிஹாசன் லண்டன் நகரை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், தாய் சரிகாவிடம் காதலரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சியில் காதலருடன் வருகை தந்திருந்த ஸ்ருதிஹாசன், அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சன் ஆகிய மூவரும் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விராத்கோஹ்லி-அனுஷ்கா திருமணம் எப்போது?

விராத்கோஹ்லி-அனுஷ்கா திருமணம் எப்போது?

சற்றுமுன், செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர்களுடைய திருமண தேதி முடிவாகியிருப்பதாக கூறப்படுகிறது விராத்-அனுஷ்கா திருமணம் இம்மாதம் 9 முதல் 12 வரை நடைபெறவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. திருமணத்தை அடுத்தே வரும் 10ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய, இலங்கை அணி விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விராத்கோஹ்லி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சீரியல் ஜோடி நிஜ ஜோடியாக மாறிய கதை

சீரியல் ஜோடி நிஜ ஜோடியாக மாறிய கதை

சற்றுமுன், சின்னத்திரை
  தற்போது சீாியல் மோகம் அனைவரரையும் ஆட்டி படைத்து வருகிறது. அதுவும் இப்போது பாம்பு சீாியல் எல்லா தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதோடு பேய்களையும் உள்ளே நுழைத்து விடுவது தான் தற்போதைய ட்ரண்டாக உள்ளது. வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரும் சீாியல் பாா்த்து வருகின்றனா். தெய்வமகள் சீாியலை அண்ணியாராக நடிக்கும் காயத்ரிக்கு ஆகவும், சத்யாவுக்காவும் பாா்ப்பதற்கென்று ரசிக பட்டாளம் இருக்கிறது. அதுபோல சீாியலில் கணவன் மனைவியாக நடித்தவா்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் வரும் பிாியமானவள் சீாியலில் கணவன் மனைவியாக நடித்தவா்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி.  அவந்திகா கதாபாத்திரத்தில் சிவரஞ்சனியும், நட்ராஜ் கதாபாத்திரத்தில் விஜய் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தது நிஜ தம்பதினா் போல இருந்தது. இதனால் இருவருக்குமிடை