குறிச்சொல்: lyca

கமல்ஹாசனுடன் நடிக்க தயங்குகிறாரா நயன்தாரா?

கமல்ஹாசனுடன் நடிக்க தயங்குகிறாரா நயன்தாரா?

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று செய்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து நயன்தாராவிடம் பேச்சு நடத்தியதும் உண்மை என தெரிகிறது. ஆனால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டும் நடித்து வரும் நயன்தாரா, கமல் படத்தில் நடித்தால் தனது கேரக்டரின் முக்கியத்துவம் பாதிக்கப்படும் என்பதால் நடிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்காக ரூ.7 கோடி வரை தயாரிப்பு தரப்பு தர தயாராக இருப்பதாக கூறப்படுவதால் அவர் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
சிம்பு-மணிரத்னம் படத்தை கைப்பற்றும் லைகா?

சிம்பு-மணிரத்னம் படத்தை கைப்பற்றும் லைகா?

சற்றுமுன், செய்திகள்
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு இம்மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தகவலை சிம்புவும் படக்குழுவினர்களும் உறுதி செய்துள்ளனர். மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி என்ற அடிப்படையில் லைகா நிறுவனம் மணிரத்னம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது சிம்பு, விஜய்சேதுபதி, நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏப்ரலில் 2.0 ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஏப்ரலில் 2.0 ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0 திரைப்படம் வரும் ஜனவரியில் குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் ஆனால் தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படம் ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 28ஆம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் 2.0 ரிலீஸ் இல்லை என்பதால் டிக் டிக் டிக், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல திரைப்படங்கள் பொங்கல் மற்றும் குடியரசு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளன
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 மேக்கிங் வீடியோ

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 மேக்கிங் வீடியோ

சற்றுமுன், வீடியோ
சிவாஜி,எந்திரன் படங்களை அடுத்து ரஜினி-ஷங்கர் கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பான 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியானது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
‘கத்தி’யை அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்த லைகா

‘கத்தி’யை அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்த லைகா

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் வந்த லைகா நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு உள்பட பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ள அதிரடி ஆக்சன் படமான 'ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை லைகா ரிலீஸ் செய்யவுள்ளதால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் வரும் செப்