குறிச்சொல்: Maari 2

தனுஷூக்கு ரசிகர்கள் விட்ட சாபம்: அதிர்ச்சி தகவல்

தனுஷூக்கு ரசிகர்கள் விட்ட சாபம்: அதிர்ச்சி தகவல்

Uncategorized
தனுஷ் நடிக்க மாரி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரசிகர்களின் விருப்பத்தை புறக்கணித்த தனுஷ், 'மாரி 2' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த தகவல் நேற்று அதிகாரபூர்வமாக வெளிவந்தது இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே 'விஐபி 2' படத்தில் அனிருத் இல்லாதது பெரிய குறையாக கருதப்பட்டதால், 'மாரி 2' படத்திற்காகவது அனிருத் இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், இந்த படமும் 'விஐபி 2' போலவே தோல்வி அடையும் என சமூக வலைத்தளங்களில் சாபமிட்டு வருகின்றனர்.
தனுஷின் மாரி-2 படத்தில் பிரேமம் நாயகி

தனுஷின் மாரி-2 படத்தில் பிரேமம் நாயகி

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த ‘மாரி’ படம் வியாபார ரீதியாக நல்ல வசூலை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய பாகத்தில் நடித்த தனுஷே இப்படத்தில் நடிக்கவும் முடிவு செய்தார். பாலாஜி மோகனே இயக்கவும் ஆயத்தமானார். இப்படத்திற்கான ஸ்கிரிப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்தது. தனுஷ் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்ததால், இப்படத்தில் பணிகள் ஆரம்பமாகமலேயே இருந்து வந்தது. தற்போது தனுஷ் இப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதால், இப்படத்தின் பணிகள் ஜெட் வேகத்தில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக இப்படத்தின் கதாநாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர். முந்தைய பாகத்தில் நடித்த காஜல் அகர்வால், தற்போது விஜய், அஜித் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்திவிட்டதால
தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம் என இவரது பட வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். இந்த படங்களில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்பதை கீழே பார்ப்போம். தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். மூன்று பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பாகம் மட்டுமே இரண்டரை மணி  நேரம் ஓடக்கூடியதாக இருக்குமாம். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே இந்த படம்தான் அவருடைய சிறந்த படமாக இருக்கும் என்று கூறுகின்றனர். தனுஷ் நடிக்கவிருக்கும் மற்றொரு படமான  ’மாரி-2’ படத்தை முதல் பாகத்தை