குறிச்சொல்: Madurai

கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் இரண்டு முதல்வர்கள்

கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் இரண்டு முதல்வர்கள்

சற்றுமுன், தமிழகம்
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவித்துவிட்டு, கட்சியின் கொடியையும் ஏற்றி சிறப்புரை ஆற்றவுள்ளார் இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு இரண்டு முதல்வர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாமவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். இருவருமே பாஜக எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் மட்டுமின்றி மேலும் சில முன்னாள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளும் இன்றைய கமல் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம்: கமலின் 21ஆம் தேதி முழு திட்டம்

ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம்: கமலின் 21ஆம் தேதி முழு திட்டம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அன்றைய தினம் அவருடைய முழு சுற்றுப்பயண விபரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி காலை 7 மணிக்கு முன்னாள் குடியரசு தலைவர் இல்லத்தில் தொடங்கும் அவரது நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு மதுரை வரை தொடர்கிறது. இந்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம் காலை 7.45 மணி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்துக்கு வருகிறார் காலை 8.15 மணி: கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்திக்கின்றார் காலை 11.00 மணி: அப்துல்கலாம் அவர்களின் நினைவிடம் செல்கிறார் காலை 12.30 மணி: ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம் பிற்பகல் 2.30 மணி: பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலுக்கு முன் பொதுக்கூட்டம் பிற்பகல் 3.00 மணி: மானாமதுரையில் ஸ்ரீபிரியா தியேட்டர் அருகே பொதுக்கூட்டம் பிற்பகல் 5.00 மணி: மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் வருகிறார் மாலை 6.00
275 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிக்கும் கபாலி…

275 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிக்கும் கபாலி…

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படம் மதுரையில் உள்ள திரையங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ‘கபாலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த திரைப்படம் மதுரையில் உள்ள மணி இம்பாலா என்ற தியேட்டரில் 275 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கபாலி275 என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.