குறிச்சொல்: magizh thirumeni

அருண்விஜய் நடிக்கும் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

அருண்விஜய் நடிக்கும் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகர் அருண்விஜய் நடித்த 'குற்றம் 23' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அருண்விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் 'தடம்' என்றும், இந்த படத்தை 'தடையற தாக்க', மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் அருண்விஜய் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் விறுவிறுப்பான த்ரில் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19 முதல் தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.