குறிச்சொல்: Maheshbabu

பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக இவர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸை சந்தித்து ஒரு கதையை அவரிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை பிரபாஸுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபாஸ் இணையும் அந்த படம் பாகுபலிக்கு இணையாக பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறதா
அஜித் படத்தில் மகேஷ்பாபு: ஒரு ஆச்சரிய செய்தி

அஜித் படத்தில் மகேஷ்பாபு: ஒரு ஆச்சரிய செய்தி

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்துவிட்டதால் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் டிரைலரை 'விவேகம்' ரிலீசுக்கு முந்தைய நாள் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதுமடுட்மின்றி 'விவேகம்' வெளியாகும் திரையரங்குகளிலும் இந்த படத்தின் டிரைலரை வெளியிட ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அஜித் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் நிச்சயம் இதுவொரு ஆச்சரியம் தரும் செய்தியாகத்தான் இருக்கும்
சூர்யாவின் அடுத்த படத்தில் விஜய்-மகேஷ்பாபு நாயகி

சூர்யாவின் அடுத்த படத்தில் விஜய்-மகேஷ்பாபு நாயகி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா, செல்வராகவன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்திலும் நாயகி ராகுல் ப்ரித்திசிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது சூர்யா மற்றும் செல்வராகவன் படத்தில் முதல்முறையாக இணையும் ராகுல் ப்ரித்திசிங்கிற்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும் இந்த படம் அவருக்கு தமிழில் குறிப்பிட்டு சொல்லும்படியான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
ஸ்லீப்பர் செல்’ஐ அடுத்து பயோ பயங்கரவாதத்தை கையில் எடுத்த முருகதாஸ்

ஸ்லீப்பர் செல்’ஐ அடுத்து பயோ பயங்கரவாதத்தை கையில் எடுத்த முருகதாஸ்

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். ரமணாsவில் அரசு ஊழியர்களின் ஊழல், 7ஆம் அறிவு படத்தில் போதி தர்மர், துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல், கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்சனை என தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் 'ஸ்பைடர்' படத்தில் பயோ பயங்கரவாதம் குறித்து அலசியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பயோ முறையை தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக கையில் எடுத்துள்ள நிலையில் இதனால் ஒரு நாட்டிற்கு ஏற்படும் ஆபத்தையும், அதை தடுக்கும் முறையையும் முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தில் கூறியுள்ளாராம். மேலும் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு ஒரு இயந்திர ஸ்பைடர்தான் உதவுகிறதாம். இப்படி ஒரு தகவல் இந்த படம் குறித்து கசிந்து வருவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தம
தலைப்பு விவகாரம் ; முருகதாஸ்-மகேஷ்பாபு இடையே கருத்து வேறுபாடு?

தலைப்பு விவகாரம் ; முருகதாஸ்-மகேஷ்பாபு இடையே கருத்து வேறுபாடு?

பிற செய்திகள்
இயக்குனர் முருகதாஸ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ்பாவுவிற்கு ஜோடியாக, தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள ராகுல் ப்ரீத்திசிங் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தலைப்பை தேர்ந்தெடுக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தார் முருகதாஸ். இந்நிலையில், இந்த படத்திற்கு ‘சம்பவாமி யுஹே’ என அவர் பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு பதிப்பிற்கும் சேர்த்து முருகதாஸ் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த தலைப்பு மகேஷ்பாபுவிற்கு பிடிக்கவில்லையாம். தலைப்பை மாற்றச் சொல்லி முருகதாஸிடம் வற்புறுத்தி வருகிறாராம். எனவே, அவருக்கு பிடித்தது போல் ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கும்