குறிச்சொல்: malayam

பிரியா வாரியரின் புருவ டான்ஸ்: வைரலாகும் வீடியோ

பிரியா வாரியரின் புருவ டான்ஸ்: வைரலாகும் வீடியோ

சற்றுமுன், செய்திகள், வீடியோ
ஓரே ஒரு பாடல் மற்றும் டான்ஸ் மூலம் மிகவும் பிரபலமானது ஜிமிக்கி கம்மல் ஷெரில். அந்த வகையில் தற்போது மலையாள நடிகையின் புருவ டான்ஸ் அனைவரது கவனத்தை திரும்பி வருகிறது. மலையாள நடிகையின் மீதுள்ள மோகம் இன்னும் தீர்ந்தபாடியில்லை என்று தான் சொல்ல வேண்டும். யூடியூப் பாடல்களில் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். உலகளவில் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் எப்படி வைரலாகியது அதைப்போல ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் புருவ ஸ்டைல் டான்ஸ் தான். மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியா்.மாடலிங் பெண்ணான இவா் மலையாளத்தில் நடிகையாக ஜொலிக்க தொடங்கியுள்ளார். 18 வயதான இவா் திரிச்சூரைச் சோ்ந்தவா். பி.காம் படித்து வருகிறாராம். சின்ன வயதிலிருந்தே நடிப்பு என்றால் அவ்வளவு ஆசை. 12 ஆம் வகுப்பு படிக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால்
ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் சமுத்திரக்கனியின் ஆகாச மிட்டாயி

ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் சமுத்திரக்கனியின் ஆகாச மிட்டாயி

சற்றுமுன், செய்திகள்
தமிழில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற படம் அப்பா. அதிக காசுக்கு ஆசைப்படும் கல்வி நிறுவனங்கள் அங்கு நடக்கும் கொடுமைகளையும் இப்படத்தில் கடுமையாக சாடியிருந்தார் இயக்குனர் சமுத்திரக்கனி. நகைச்சுவை மற்றும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் தம்பி ராமையா நடித்து இருந்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த சமுத்திரக்கனி இப்படத்தை மலையாளத்தில் ஆகாச மிட்டாயி என்ற பெயரில் இயக்கினார். தமிழில் சமுத்திரக்கனி நடித்த பாத்திரத்தில் மலையாளத்தில் ஜெயராம் நடித்துள்ளார். தம்பி ராமையா கதாபாத்திரத்தில் கலாபவன் சாஜன் நடித்துள்ளார்.கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணமன்று இப்படம் வெளியாகவுள்ளது.
திலீப்புடன் என்னை ஏன் கோர்த்துவிடுகிறீர்கள்?- அலறும் லட்சுமி ராமகிருஷ்ணன்

திலீப்புடன் என்னை ஏன் கோர்த்துவிடுகிறீர்கள்?- அலறும் லட்சுமி ராமகிருஷ்ணன்

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில தினங்களாக மலையாள நடிகர் திலீப்புடன்  நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை கோர்த்துவிட்டு செய்திகள் உலா வருகின்றன.  இந்த செய்தி என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு திலீப்புடன் கொல்கத்தா நியூஸ் என்ற படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவரை நீக்கினார்கள். அதற்கு திலீப் தலையீடுதான் காரணமென்று லட்சுமி கூறியதாக செய்திகள் வந்தன. இந்த செய்திகளை தொடர்பு படுத்தி தற்போது தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,  கொல்கத்தா நியூஸ் படத்திலிருந்து நீக்கியதற்கு திலீப் காரணம் இல்லை. நான் ராசியில்லாத நடிகை எனக் கூறி அப்படத்திலிருந்து நீக்கினார்கள். இப்போது எனது ராசி எப்படி என்று அனைவருக்குமே தெரியும். மேலும் படத்திலிருது நீக்கியது தொடர்பாக திலீப் என்னுடன் பேசினார்.