ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: marriage

ரஷ்ய காதலரை கை பிடிக்கும் ஸ்ரேயா

ரஷ்ய காதலரை கை பிடிக்கும் ஸ்ரேயா

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. வதந்தியாக பரவி வருகிறது. ஸ்ரேயா எனக்கு இருபது உனக்கு பதினெட்டு படத்தில் முதலில் நடித்தார். பின் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், சூப்பா் ஸ்டாருடன் சிவாஜி, மழை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 2 படங்களில் நடிக்கிறார். தமிழில் சொல்லும்படியாக படங்கள் எதுவும் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் பரவியது. மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது ரஷ்யாவை சேர்ந்த வாலிபரை ஸ்ரேயா சந்தித்தாகவும், அப்போது இருவருக்குமிடையே காதல் மலா்ந்ததாகவும், இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய அவா்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா். வரும் மார்ச் மாதம் ஜெய்பூரில் அவரது
கீர்த்தனாவின் மாப்பிள்ளை யார் தெரியுமா?

கீர்த்தனாவின் மாப்பிள்ளை யார் தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
நடிகர், இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதற்காக பார்த்திபன் திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் கீர்த்தனா திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்திற்கு படத்தொகுப்பு செய்து வருபவரும் பிரபல படத்தொகுப்பாளருமான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்சய் அக்கினேனியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா' படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் தான் இந்த அக்சய் என்பது குறிப்பிடத்தக்கது  
படம் முடியும் வரை கர்ப்பம் கூடாது! சமந்தாவுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்

படம் முடியும் வரை கர்ப்பம் கூடாது! சமந்தாவுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகை சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து குட்டி சமந்தா அல்லது குட்டி நாகசைதன்யா எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய படம் ஒன்றின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் முடியும் வரை சமந்தா கர்ப்பமாக கூடாது என்று படக்குழுவினர் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை படக்குழுவினர்களும் சமந்தா தரப்பினர்களும் மறுத்துள்ளனர்.
சன் மியூசிக் சேனலில் இருந்து வெளியேறிய அஞ்சனா

சன் மியூசிக் சேனலில் இருந்து வெளியேறிய அஞ்சனா

சற்றுமுன், சின்னத்திரை
அஞ்சனா என்றாலே சன் மியூசிக் சேனலில் அவர் தொகுத்து வந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும் இந்த நிலையில் அஞ்சனாவுக்கும் நடிகர் கயல் சந்திரனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தற்போது திடீரென சன் மியூசிக் சேனலில் இருந்து அவர் வெளியேறியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இத்தனை வருடம் தனக்கு ஆதரவு கொடுத்த சன் மியூசிக் சேனல், மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றி என்றும், அந்த ஷோவில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேறு சேனலில் அஞ்சனா இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சிம்பு-ஓவியா திருமணமா? அதிர்ச்சி தகவல்

சிம்பு-ஓவியா திருமணமா? அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்புவது கோலிவுட் திரையுலகில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. நயன்தாரா, ஹன்சிகா என சிம்புவின் காதல் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக ஓவியாவும் சிம்புவும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுநம்ம ஆளு' படத்தின் ஸ்டில்லில் நயன்தாராவின் தலையை எடுத்துவிட்டு ஓவியாவின் தலையை ஒட்டியுள்ளார் ஒரு நெட்டிசன். அதிலும் போட்டோஷாப் தொழிலுக்கு புதுசுபோல, எல்கேஜி குழந்தை கூட இது மார்பிங் செய்த போட்டோ என்று கூறும் வகையில் ஒரு புகைப்படத்தை தயார் செய்து வைரலாக்கியுள்ளார். இது போலி புகைப்படம் என்று தெரிந்தே பலர் இந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்
திருப்பதியில் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா?

திருப்பதியில் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா?

சற்றுமுன், செய்திகள்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவது தெரிந்ததே. விக்னேஷ் சிவன் இயக்கி வந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நெருங்கிய உறவினர்களுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி கோவிலில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கி வந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கே இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்னர் பக்தியில் மூழ்கிய நமீதா

திருமணத்திற்கு பின்னர் பக்தியில் மூழ்கிய நமீதா

சற்றுமுன், செய்திகள்
கவர்ச்சி நடிகை நமீதாவுக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான வீரேந்திர சவுத்ரிக்கும் கடந்த நவம்பர் 24ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் கணவருடன் சேர்ந்து நமீதா பார்த்த முதல் படம் ஒரு பக்தி படமாம். கிருஷ்ணர் மீது அதிக பக்தியுடன் இருக்கும் நமீதா, கணவருடன் சேர்ந்து 'ஹரே கிருஷ்ணா' என்ற படத்தை முதன்முதலில் பார்த்துள்ளார். திருமணம் முடிந்தாலும் தொடர்ந்து ஆன்மீக தலங்களுக்கு சென்று பக்தி மார்க்கத்தை கடைபிடிக்க உள்ளதாகவும், பக்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சம்பளத்தை கூட குறைத்து கொள்ள தயார் என்றும் நமீதா கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் சற்றுமுன்னர் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இனிதே முடிந்ததாக விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது நண்பர்கள் மற்றும் கோஹ்லி - அனுஷ்கா தரப்புக்கு நெருக்கமான நபர்கள் முன் இந்த திருமணம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விராத்-அனுஷ்கா இருவரும் காதலித்து வந்த நிலையில் இடையில் ஒரு சிறு ஊடல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
திடீர் மணமகளாக மாறிய விஜே மணிமேகலை

திடீர் மணமகளாக மாறிய விஜே மணிமேகலை

சற்றுமுன், செய்திகள்
சன் டிவி புகழ் மணிமேகலை கடந்த சில வருடங்களாக ஹூசைன் என்பவரை காதலித்து வந்த நிலையில், வேற்று மதத்தவரை திருமணம் செய்ய அவரது தந்தை அனுமதிக்கவில்லை இந்த நிலையில் தந்தையின் எதிர்ப்பை மீறி ஹூசைன் உறவினர்கள் மற்றும் தோழிகள் சூழ மணிமேகலை நேற்று திடீரென மாலை மாற்றி மணம் செய்து கொண்டார். தனது திருமணம் குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, 'எவ்வளவு போராடியும் என்னுடைய தந்தையின் மனதை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் என்னுடைய குடும்பத்தை எதிர்த்து இன்று என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றைக்காவது ஒருநாள் என்னுடைய அப்பா எங்களை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்' என்று கூறினார்
கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஸ்ருதிஹாசன் லண்டன் நகரை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், தாய் சரிகாவிடம் காதலரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சியில் காதலருடன் வருகை தந்திருந்த ஸ்ருதிஹாசன், அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சன் ஆகிய மூவரும் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.