குறிச்சொல்: Master Mahendiran

விஷப்பூச்சி கடித்தும் ஒய்வெடுக்காமல் நடித்த புதுமுக நடிகை

விஷப்பூச்சி கடித்தும் ஒய்வெடுக்காமல் நடித்த புதுமுக நடிகை

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் ‘மாஸ்டர்’ மகேந்திரன் புதிதாக நடித்து வரும் படம் ‘நாடோடி கனவு’. இப்படத்தில் நாயகியாக சுப்ரஜா நடித்துள்ளார். வீர செல்வா இயக்கி வரும் இப்படத்தில் கிரேன் மனோகர், விஜய் கணேஷ், கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது கதாநாயகி சுப்ரஜாவிற்கு விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டுவிட்டதாம். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் ஓய்வெடுக்காமல் உடனே மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம். இப்படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம