ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: mayavan

சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் ‘டைட்டானிக்’

சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் ‘டைட்டானிக்’

சற்றுமுன், செய்திகள்
'மாயவன்' என்ற படத்தை தயாரித்து இயக்கிய சி.வி.குமார் தற்போது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார். இந்த படத்திற்கு அவர் டைட்டானிக் என்ற டைட்டிலை வைத்துள்ளார். மேலும் டைட்டிலுக்கு கீழே காதலும் கவுந்து போகும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த படம் ஒரு காதல் தோல்வி குறித்த கதையம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எம்.ஜானகிராமன் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ள இந்த படத்திற்கு பாலு ஒளிப்பதிவும், நிவாஸ் பிரசன்னா இசையமைக்கவும், ராம்பிரசாத் கலை இயக்க பணிகளையும் செய்யவுள்ளனர். கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
போட்ட பணம் கூட வராத படத்திற்கு சக்ஸஸ் பார்ட்டியா?

போட்ட பணம் கூட வராத படத்திற்கு சக்ஸஸ் பார்ட்டியா?

சற்றுமுன், செய்திகள்
கடந்த வாரம் வெளிவந்த அருவி, மாயவன், சென்னை 2 சிங்கப்பூரி ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் செய்து வருகின்றன இந்த நிலையில் நகுல் நடித்த பிரம்மா.காம் என்ற படமும் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படம் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மிகக்குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகி, போட்ட பணத்தை கூட எடுக்கவில்லை. சென்னையில் இந்த படம் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் சேர்த்து வெறு ரூ.8 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது. இந்த நிலையில் போட்ட பணத்தை கூட தயாரிப்பாளர் எடுக்காத நிலையில் படக்குழுவினர் இன்று சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
‘மாயவன்’ திரை விமர்சனம்

‘மாயவன்’ திரை விமர்சனம்

சற்றுமுன், விமர்சனம்
பல புதுமுக நடிகர்கள், இயக்குனர்களை திரையுலகில் அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் 'மாயவன்' போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷான் தற்செயலாக தீனா தனது மனைவியை கொலை செய்வதை பார்க்கின்றார். அவரை பிடிக்கும் முயற்சியில் பலத்த காயமடையும் சந்தீப், நூலிழையில் உயிர் தப்புகிறார். இதில் தீனா கொலை செய்யப்படுகிறார். இந்த நிலையில் உடல்நிலை தேறி மீண்டும் பணியில் சேர மனோதத்துவ டாக்டர் லாவண்யா திரிபாதியிடம் சான்றிதழ் வாங்கி வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். ஆனால் லாவண்யா, அவரது மனநிலை பணியில் சேரும் அளவுக்கு இல்லை என்று கூற, வேறொரு டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி பணியில் சேருகிறார் சந்தீப் இந்த நிலையில் தீனா கொலை செய்த அதே பாணியில் பிரபல நடிகை ஒருவரும் விஞ்ஞானி ஒருவரும், உளவியல் துறை நிபுணர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சந்தீப் கையில் வருகிறது
அஜித்தும் விஜய்யும் இந்த விஷயத்துல ஒண்ணுதான்: சொல்கிறார் பிரபல வில்லன் நடிகர்

அஜித்தும் விஜய்யும் இந்த விஷயத்துல ஒண்ணுதான்: சொல்கிறார் பிரபல வில்லன் நடிகர்

சற்றுமுன், செய்திகள்
அஜித்-விஜய்யும் தொழில்முறையாக போட்டி போட்டுக் கொண்டாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்தான். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை பற்றி வில்லன் நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்துவரும் டேனியல் பாலாஜிதான். இவர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல், விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவருடனும் நடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி டேனியல் பாலாஜி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, நான் படங்களை தாண்டி இவர்கள் இருவரிடமும் கவனித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது.   படப்பிடிப்பு நடக்கும்போது சரியான நேரத்துக்கு இரண்டு பேரும் வந்துவிடுவார்கள். அதேபோல், வந்தவுடனே அனைவருக்
சி.வி.குமாரின் ‘மாயவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சி.வி.குமாரின் ‘மாயவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதன்முதலில் இயக்கிய 'மாயவன்' திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. சென்சாரில் 'யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தில் சந்தீப்கிஷான், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அக்சரா கெளடா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணியும் ச