குறிச்சொல்: meena

ஹீரோயினிக்கு அம்மாவாக நடிக்கும் அஜித் நாயகி

ஹீரோயினிக்கு அம்மாவாக நடிக்கும் அஜித் நாயகி

சற்றுமுன், செய்திகள்
அஜித் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த மீனா, திருமணத்திற்கு பின் அதிகமான படங்களில் நடிக்கவில்லை ஆனால் த்ரிஷ்யம்' படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்-பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் படத்தில் பூஜாவுக்கு அம்மாவாக நடிக்க நடிகை மீனா ஒப்புக்கொண்டுள்ளாராம். அம்மா கேரக்டர் என்றாலும் அழுத்தமான கேரக்டர் என்பதால் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி கட்சியில் குவியும் நடிகர்கள்: ஆட்சியை பிடித்துவிடுவாரோ?

ரஜினி கட்சியில் குவியும் நடிகர்கள்: ஆட்சியை பிடித்துவிடுவாரோ?

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில மாதங்களாகவே தமிழகம் ஒரு வலிமையான தலைவர் இல்லாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு பலரை முகம் மலர செய்துள்ளது. இந்த முறை பூச்சாண்டி காண்பிக்காமல் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டதாம். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கட்சியின் பெயரையும் கொடியையும் ரஜினி அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ஆதரவு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் நாயகி மீனா, கவர்ச்சி நடிகை நமீதா, அதிமுக பேச்சாளர் விந்தியா உள்பட பல நடிகர்கள், நடிகைகள் ரஜினியின் கட்சியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசனும் தனது தார்மீக ஆதரவை தனது நண்பருக்கு தெரிவிப்பார் என்ற வதந்தியும் உலாவி வருகிறது. அதுமட்டுமின்றி திமுக, அதிமுகவின் இரு அணிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களும் ரஜினியின் கட்சியில் இணையவு