ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: modi

விஜய் இதுவரை எதுவுமே பேசாதது ஏன்? பிரபல பத்திரிகையாளர்

விஜய் இதுவரை எதுவுமே பேசாதது ஏன்? பிரபல பத்திரிகையாளர்

சற்றுமுன், செய்திகள்
'மெர்சல்' பிரச்சனை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் ரஜினி, கமல் முதல் கிட்டத்தட்ட அனைத்து திரையுலகினர்களும் மெர்சல் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துவிட்ட நிலையிலும் இன்னும் விஜய் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இன்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தன்னை காப்பாற்றி கொள்ளவே வாய்திறக்காமல் மெளனமாக இருப்பதாகவும், கோவையில் மோடியை பார்த்த பின்னர் விஜய் இன்று வரை மோடியை எதிர்த்து எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை என்றும் தன்னுடைய நன்மைக்காகவே எடப்பாடி பழனிச்சாமியை விஜய் போய் பார்த்ததாகவும் கூறியுள்ளார். தன்னை மட்டுமே காப்பாற்றி கொள்ளும் எண்ணம் உள்ள ஒருவரை எப்படி ஒரு அரசியல் கட்சி தலைவராக மக்கள் ஏற்று கொள்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
பிரதமர் மோடியை ஜெர்மனியில் சந்தித்த விஜய் பட நடிகை

பிரதமர் மோடியை ஜெர்மனியில் சந்தித்த விஜய் பட நடிகை

சற்றுமுன், செய்திகள்
இந்திய பிரதமர் மோடி 4 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று டெல்லியில் இருந்து கிளம்பினார். இன்று காலை அவர் ஜெர்மனியை அடைந்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும் விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் நடித்தவருமான ப்ரியங்கா சோப்ரா நடித்த 'பே வாட்ச்' படத்தை புரமோஷன் செய்ய ஜெர்மனி சென்றிருந்தார். பிரதமர் மோடியும் ஜெர்மனி வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்க நேரம் கேட்டபோது அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இன்று காலை மோடி-ப்ரியங்கா சோப்ரா சந்திப்பு ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து ப்ரியங்கா கூறியபோது, 'தனக்காக நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி. எதிர்பாராத இந்த சந்திப்பு தனது மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது' என்று கூறியுள்ளார்
மோடியை சந்திக்க ரஜினி திட்டமா? ரசிகர்கள் எடுக்கும் அதிரடி சர்வே!

மோடியை சந்திக்க ரஜினி திட்டமா? ரசிகர்கள் எடுக்கும் அதிரடி சர்வே!

சற்றுமுன், தமிழகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவது குறித்து பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் தற்போது ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் குதிப்பது சரியான நேரம் என்று முடிவு செய்த அவர் அதற்கான ஆரம்ப கட்ட பணியை தொடங்கிவிட்டு தான் ரசிகர்கள் முன் அரசியல் குறித்து பேசியுள்ளார் தன்னுடைய அரசியல் பேச்சு இந்த அளவுக்கு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்க்காத ரஜினி, 1996ல் மிஸ் செய்த தனக்கான இடம் இன்னும் அப்படியே இருப்பதை உணர்ந்துள்ளதாகவும், எனவே இதுவே அரசியலில் குதிக்க சரியான தருணம் என்று அவர் முடிவு செய்துவிட்டதாகவும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ரசிகர்களிடம் ரஜினி ஒரு முக்கிய பணியை கொடுத்துள்ளாராம். தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சனை என்ன? அந்த பிரச்சனையின் தீர்வுக்கு என்ன வழி என்பது குறித்த ஒரு அறிக்கையை கேட்டுள்ளாராம். இந்த அற