குறிச்சொல்: mother

ரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்

ரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்

சற்றுமுன், செய்திகள்
நடிகர், இயக்குனர், நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு உள்பட பல போராட்டங்களுக்கு அவர் ஆதரவு கொடுத்தும் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அரசியல் வருகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கவுள்ளாராம். தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ், ரஜினி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாயாருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள ராகவா லாரன்ஸ் , அந்த கோவிலின் திறப்பு விழா தேதியையும் வரும் 4ஆம் தேதி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோயினிக்கு அம்மாவாக நடிக்கும் அஜித் நாயகி

ஹீரோயினிக்கு அம்மாவாக நடிக்கும் அஜித் நாயகி

சற்றுமுன், செய்திகள்
அஜித் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த மீனா, திருமணத்திற்கு பின் அதிகமான படங்களில் நடிக்கவில்லை ஆனால் த்ரிஷ்யம்' படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்-பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் படத்தில் பூஜாவுக்கு அம்மாவாக நடிக்க நடிகை மீனா ஒப்புக்கொண்டுள்ளாராம். அம்மா கேரக்டர் என்றாலும் அழுத்தமான கேரக்டர் என்பதால் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படம் ஆகிறது தாயை கொன்ற தஷ்வந்த் கதை

திரைப்படம் ஆகிறது தாயை கொன்ற தஷ்வந்த் கதை

சற்றுமுன், செய்திகள்
சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் தப்பித்து பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் விறுவிறுப்பாக சம்பவங்களை உடனுக்குடன் திரைப்படமாக்கும் கோலிவுட் திரையுலகம் இந்த கதையையும் விட்டு வைக்கவில்லை பிரபல இயக்குனர் ஒருவர் இந்த கதையை திரைப்படமாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.  
பிரபாசுடன் நடித்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும். மஞ்சுலட்சுமி

பிரபாசுடன் நடித்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும். மஞ்சுலட்சுமி

சற்றுமுன், செய்திகள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சுலட்சுமி. 40 வயதை நெருங்கிவிட்ட போதிலும் இன்னும் அக்கா, அம்மா வேடங்களை ஏற்காமல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி 2' படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க முதலில் ராஜமெளலி, முதலில் மஞ்சுலட்சுமியிடம் தான் பேசினார். ஆனால் பிரபாசை விட வெறும் இரண்டு வயது மட்டுமே அதிகமான தன்னால் அவருக்கு எப்படி அம்மாவாக நடிக்க முடியும் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் பின்னர் ரம்யாகிருஷ்ணன் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தமானார். தற்போது 'பாகுபலி 2' படம் வெளியாகி சுமார் ரூ.1600 கோடிகளை குவித்த நிலையிலும் அந்த படத்தை மிஸ் செய்தது குறித்து லட்சுமி மஞ்சு கவலைப்படவில்லை. இப்போதும் சொல்கிறேன் எனக்கு பிரபாசுடன் நடிக்கும்போது அம்மா ஃபீலிங் வராது, வேற மாதிரி ஃபீலிங் தான் வரும்'