குறிச்சொல்: movie

அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட்டில் ஒரு வித்தியாசமான காதல் அம்சம் கொண்ட திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கண்டதும் காதல், காணமலே காதல் என பல காதல் கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்கும், அவரின் சகோதரனுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால், இது தமிழில் அல்ல பாலிவுட்டில். ‘ஐ ஆம் ரோஷினி’ என்கிற படத்தில்தான் பொருந்தா காதலை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தொடாத கதைக்களம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கண்டிப்பான பெற்றோர், ஏமாற்றுப் பேர் வழியான காதலன், காம வெறி பிடித்த மாமா, இந்த சூழ்நிலையில் உள்ள ஒரு இளம் பெண் தனக்கு ஆறுதலாகவும், தன்னோடு அன்பாகவும் பழகும் தனது சகோதரன் மீது காதல் கொள்கிறாள் என பயணிக்கிறது இப்படம். ஆனால், இப்படம் பற்றி கருத்து தெர
ஏராளமான படங்களில் வாய்ப்பு ; ஓவியா இப்போ ரொம்ப பிசி

ஏராளமான படங்களில் வாய்ப்பு ; ஓவியா இப்போ ரொம்ப பிசி

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா ஏராளமான புதுப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்நிலையில், அவர் தமிழில் பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஷ்ணுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்திலும், இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்திலும் நடித்து வரும் அவர், அதன் பின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன் பின், யாமிருக்க பயமேன் -2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல், அவர் மலையாளத்தில் ஏற்கனவே நடித்த படங்களையும், தற்போது மொழிமாற்றம் செய்து வெளியிட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், நடிகர் பிரித்திவிராஜுட
டி.ஐ.ஜி ரூபா வேடத்தில் நடிகை நயன்தாரா?

டி.ஐ.ஜி ரூபா வேடத்தில் நடிகை நயன்தாரா?

சற்றுமுன், செய்திகள்
சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா. எப்போதும், எங்கேயும் நேர்மையாக செயல்படும் இவரின் கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. நேர்மையாக இருந்ததால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தை வனயுத்தம், குப்பி ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது “ டிஐஜி ரூபாவின் அலுவலகம் சென்று அவரிடம் நேரிடையாகவே இதுபற்றி பேசினேன். அப்போது அவர் பல தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதோடு, அவரின் கதையை சினிமாவாக எடுக்க சம்மதமும் தெரிவித்தார். இந்தப்படம் சிறை விதிமீறல், முறைகேடுகள் பற்றியது என்றாலும், ரூபா இதுவரை பணியாற்றிய மற்ற வழக்குகளின் விபரங்களும் இப்படத்தில் இடம்பெறும்.
செல்வராகவன் படத்திற்கா இந்த கதி?

செல்வராகவன் படத்திற்கா இந்த கதி?

சற்றுமுன், செய்திகள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா,ரெஜினா மற்றும் நந்திதா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர்  ராஜா இசையமைத்தார்.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுடன் இணைந்து கௌதம் மேனன் தயாரித்துள்ள இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டன. பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்று வரை உறுதியான தேதி தெரியவில்லை. இந்த நிலையில் செல்வராகவன் இப்படம் குறித்து டுவிட்டரில் கூறுகையில், உங்களுடைய விசாரிப்புகள் என் நெஞ்சைத்  தொட்டுவிட்டன. மிக விரைவில் படம் வெளிவரும். இந்தப் படம் தயாரிப்பாளர் மதன் படம். எப்போது சிறந்ததாகக் கொடுக்க  வேண்டும் என அவருக்குத் தெரியும். படத்தின் ரிலீஸ் தேதி இயக்குநர்கள் கையில் இல்லை என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நல்ல உணர்வுகள் கொண்ட படங்களை எடுத்த செல்வராகவன் படத்திற்கா இந்த நிலை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்
நயன்தாராவா? பிசினஸா? சரவணா ஸ்டோர் சரவணன் எடுத்த அதிரடி முடிவு

நயன்தாராவா? பிசினஸா? சரவணா ஸ்டோர் சரவணன் எடுத்த அதிரடி முடிவு

சற்றுமுன்
பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் சொந்தமாக திரைப்படம் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும், தனது முதல் படத்தின் நாயகி நயன்தாரா என்றும் இதற்காக எத்தனை கோடி சம்பளம் வேண்டுமானாலும் அவருக்கு கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த தகவலை சரவணா ஸ்டோர் சரவணன் ஏற்கனவே மறுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த விளம்பரப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது. இந்த விளம்பர படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த சத்யா என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'சரவணா ஸ்டோர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக கூறியது முழுக்க முழுக்க தவறான தகவல். அவர் தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்' என்று கூறினார். காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, இளையதளபதி விஜய் நடித்த 'தெறி', 'பைரவா; போன்ற படங்களுக்கு காஸ்ட்யூ