ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Mumbai

மெர்சலுக்கு ஆதரவு கொடுத்த நடிகரின் வீடு இடிப்பு

மெர்சலுக்கு ஆதரவு கொடுத்த நடிகரின் வீடு இடிப்பு

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அவற்றில் ஒன்று ஜிஎஸ்டி குறித்து விஜய் பேசிய வசனத்திற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஆனால் அதே பாஜக கட்சியை சேர்ந்த சத்ருஹன்சின்ஹா, விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கட்சியில் அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் சத்ருஹன்சின்ஹா தனது வீட்டின் மொட்டை மாடியில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிய கழிவறையை இன்று காலை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். ஆளுங்கட்சி எம்பி ஒருவரின் வீட்டில் நடந்த இந்த நடவடிக்கை சத்ருஹன் சின்ஹா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்
வட மாநிலத்தில் கொண்டாடப்படும் தனுஷ்!

வட மாநிலத்தில் கொண்டாடப்படும் தனுஷ்!

சற்றுமுன், செய்திகள்
தனுஷ், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் மும்பையிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை எற்படுத்தியுள்ளதோடு ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். ‘கொலவெறி’ பாடல் மூலம் வட இந்தியர்களுக்கு அறிமுகமாகி அதிகம் பேசப்பட்ட தனுஷ்  ‘ராஞ்சனா’, ‘சமிதாப்’, ஆகிய இரண்டு இந்திப் படங்களிலும் நடித்தார். இப்பொது சக வட இந்திய நடிகராகவே அங்குள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.  விரைவில் வெளிவரவுள்ள விஐபி 2 படத்தில் பிரபல இந்தி நடிகை கஜோல் நடிப்பது அனைவரும் தெரிந்த ஒன்று, இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளிவருகிறது. ஏற்கனவே இவர் நடித்த ‘கொடி’ திரைப்படம் ‘ரவுடி ஹீரோ – 2’ என்ற பெயரில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மும்பையில் வெற்றிநடைப்போடுகிறது. இதனைத் தொடர்ந்து விஐபி 2 படமும் பெரிதும் ரசிகர்களைக் கவரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் தனுஷ்.
தனுஷூக்கும் கஜோலுக்கும் மும்பையில் என்ன வேலை? அதிர்ச்சியில் ஐஸ்வர்யா

தனுஷூக்கும் கஜோலுக்கும் மும்பையில் என்ன வேலை? அதிர்ச்சியில் ஐஸ்வர்யா

சற்றுமுன், பிற செய்திகள்
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா இயக்கி வந்த 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து கடந்த சில நாட்களாக தனுஷ் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மும்பை திரும்பி கஜோலுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விஐபி படத்தின் புரமோஷனுக்காக ஒரு மியூசிக் வீடியோவை தயாரிக்க செளந்தர்யா முடிவு செய்தார். அந்த வீடியோவில் தனுஷ் மற்றும் கஜோல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த செளந்தர்யா, தனது திட்டத்தை தனுஷிடம் கூற அவருடம் உடனே சனி, ஞாயிறு விடுமுறையில் மும்பை வந்து மியூசிக் வீடியோவில் நடித்துவிட்டு மீண்டும் ஹாலிவுட் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். தனுஷூம் கஜோலும் நடித்த இந்த வீடியோ இன்னும் ஒருசில தினங்களில் தொலைக்காட்சியிலும் இணணயதளங்களிலும் வெளிவரவுள்ளதாம் ஹாலிவுட் படப்பிடிப்பின் இடையே மும்பை வந்த தனுஷ், சென்னை வராததால் ஐஸ்வர்யா தனுஷ் அதி
ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்காக சென்னையில் மும்பை போன்ற செட் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை மும்பையில் வாழ்ந்த ஹாஜி மஸ்தான் என்பவரின் கதை என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஞ்சித் படக்குழு மறுத்தது. இந்நிலையில், ரஞ்சித் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் மும்பை தாராவி போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத்தின் இறுதியின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த படம் ஹாஜி மஸ்தானை பற்றிய கதையாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நாயகன் படத்தை இயக்கிய மணிரத்னம், மும்பை தாராவியை சென்னையில் செட் போட்டுதான் படமாக்கினார் என்பது
மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..?

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..?

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் ப.ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படம், மறைந்த மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை பற்றியது என்ற செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கினார் ரஞ்சித். அது மலேசியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய கதையாகும். அதன் பின் ரஜினி தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின், அதே ரஞ்சித் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்நிலையில், 1926-1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மும்பையில் பெரிய தாதாவாக வலம் வந்த மிர்ஜா ஹாஜி மஸ்தான் என்ற தமிழரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஹாஜி மஸ்தான் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், திரைப்படங்களுக்கு நிதியுதவி செய