குறிச்சொல்: Murali Manohar

உதவி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த ரஜினி….

உதவி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த ரஜினி….

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருப்பவர் முரளி மனோகர். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளா 2.0 படத்திலும் இவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் அவருக்கும், ரஜினிகாந்திற்கும் இடையே ஏற்பட்ட உரையாடல் பற்றி குறிப்பிட்டுள்ளார்: ”முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..?”- என்ற அவரின் (ரஜினி) கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். ”சீக்கிரம் சார்” திக்குமுக்க்காடி, சமாளிப்பாகச் சொன்னேன். “ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?”- என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்?! “ஆமா சார்...” - என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்! “நல்லாப் பண்ணுங்க... (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) அவசரப் படாதீங்க... உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு... ப்பா... இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க... சீக்கிரம