குறிச்சொல்: murder

சமந்தா கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சமந்தா கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சற்றுமுன், செய்திகள்
நடிகை சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது., இந்த டீசரில் ஒருவரின் தலையை சமந்தா வெட்டுவது போன்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதுவரை காதல் பதுமையாக மென்மையான கேரக்டர்களில் நடித்து வந்த சமந்தா, இந்த படத்தில் கொலைகாரியாக நடித்திருப்பதாகவும், அவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் படம் பார்ப்பவர்களுக்கு தெரியவரும்போது திடுக்கிடை வைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் இந்த படத்தின் நாயகன் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது
திரைப்படம் ஆகிறது உடுமலை சங்கர் கொலை வழக்கு

திரைப்படம் ஆகிறது உடுமலை சங்கர் கொலை வழக்கு

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகினர் பரபரப்பான உண்மைச்சம்பவங்களை உடனுக்குடன் படமாக்கி வெற்றியும் பெற்று வருகின்றனர். சமீபத்தில் கூட 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு நேற்றுமுன் தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு முடிவடைதற்குள் இந்த கதையை படமாக்க கோலிவுட் தயாராகிவிட்டது. பங்கஜ் எஸ்.பாலாஜி இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'மாறாது சமூகம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு புதுமுகத்திடமும், ஹீரோயினியாக நடிக்க ஒரு பெரிய நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
திரைப்படம் ஆகிறது தாயை கொன்ற தஷ்வந்த் கதை

திரைப்படம் ஆகிறது தாயை கொன்ற தஷ்வந்த் கதை

சற்றுமுன், செய்திகள்
சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் தப்பித்து பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் விறுவிறுப்பாக சம்பவங்களை உடனுக்குடன் திரைப்படமாக்கும் கோலிவுட் திரையுலகம் இந்த கதையையும் விட்டு வைக்கவில்லை பிரபல இயக்குனர் ஒருவர் இந்த கதையை திரைப்படமாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.  
கஜோலை கொலை செய்யவும் தயங்க மாட்டேன். தனுஷ்

கஜோலை கொலை செய்யவும் தயங்க மாட்டேன். தனுஷ்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ள 'விஐபி 2' படத்தின் பிரஸ்மீட் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய தனுஷ், 'கஜோல் மேடம் 20 வருடங்களுக்கு பின்னர் எங்கள் படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமையே. 'மின்சார கனவு' படம் வந்தபோது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றேன். அவரை திரையில் பார்த்து அதிசயித்துள்ளேன். இன்று அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியே 'விஐபி 2' ஆம் பாகத்தை அடுத்து 'விஐபி 3' ஆம் பாகம் மற்றும் 'விஐபி 4' ஆம் பாகம் உருவாக்கவிருப்பது உண்மைதன. 'விஐபி 3' ஆம் பாகத்தில் கண்டிப்பாக கஜோலும் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் 3ஆம் பாகத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்துதான் அவரது கேரக்டரை கொலை செய்வதா? அல்லது 4ஆம் பாகம் வரைக்கும் கொண்டு செல்வதா? என்பதை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று தனுஷ் கூறினார். மூன்றாம் பாகத்தின் கதை அமைவதை