குறிச்சொல்: music director

மீ்ண்டும் ஒரு வடசென்னை கதை

மீ்ண்டும் ஒரு வடசென்னை கதை

சற்றுமுன், செய்திகள்
வடசென்னை மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் வீரா திரைப்படம் என்று இசையமைப்பாளா் பிரசாத் S.N என்று தெரிவத்துள்ளார். வீரா படத்தின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரசாத் s.N. ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பின்னணியும் இசையும் முக்கியம். பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது. ஆனால் யாரும் பின்னணி இசையக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என கூறிய வீரா படத்தின் இசையமைப்பாளான பிரசாத், மேலும் கூறியதாவது, படத்தில் சண்டை காட்சியாக இருக்கட்டும், நகைச்சுவை காட்சியாகட்டும் ஒரு பின்னணி இசை தான் அதை மாற்றி அமைக்கும் சக்தி உண்டு. உணா்ச்சிகரமான காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றும் வலிமை பின்னணி இசைக்கு அதிகம். வீரா திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை தெளிவாக காட்டும் வகையில
அமரன்’ படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் அமரர் ஆனார்

அமரன்’ படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் அமரர் ஆனார்

சற்றுமுன், செய்திகள்
கார்த்திக் நடித்த 'அமரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் சற்றுமுன்னர் ஐதராபாத்தில் காலமானார். அமரன் படத்தை அடுத்து சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன், அசுரன், நாளைய செய்தி உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஆதித்யன் சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த ஆதித்யன் சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்
சிவகார்த்திகேயன் -பொன்ராம் படத்தின் முக்கிய அப்டேட்

சிவகார்த்திகேயன் -பொன்ராம் படத்தின் முக்கிய அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவான 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் நெபோலியன், சிம்ரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸ் பணிகளை இசையமைப்பாளர் டி.இமான் இன்று முதல் தொடங்கியுள்ளார். இந்த தகவலை டி.இமான் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே இதே கூட்டணியில் உருவான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினிமுருகன்' ஆகிய படங்களுக்கும் டி.இமான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் காதல் தேவதை யார் தெரியுமா?

சிம்புவின் காதல் தேவதை யார் தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்வியை அடுத்து அவர் தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' என்ற படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் நான்கு பாடல்களை கம்போஸ் செய்த சிம்பு, இந்த பாடல்களை யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோர்களை பாட வைத்துள்ளார். இந்த நிலையில் சிம்பு இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடிய 'காதல் தேவதை' என்ற பாடல் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலின் மூலம் சிம்புவின் உண்மையான காதல் தேவதையை அவர் மறைமுகமாக கூறியிருக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கவுதம் மேனனின் டுவிஸ்ட் முடிவுக்கு வரும் நாள் எது?

கவுதம் மேனனின் டுவிஸ்ட் முடிவுக்கு வரும் நாள் எது?

சற்றுமுன், செய்திகள்
'காதலிக்க நேரமில்லை' படத்தில் நாகேஷ் தான் இயக்க போகும் படத்திற்கு கடைசி வரை டைட்டில் வைக்கப்போவதில்லை என்றும், தனது படத்தின் டைட்டில் என்ன என்று ரசிகர்கள் தலையை பிச்சுக்கிட வேண்டும் என்றும் ஒரு வசனம் பேசியிருப்பார். கிட்டத்தட்ட அதே நிலைக்கு ரசிகர்களை கொண்டு வந்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன் 'தற்போது இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையிலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அவர்  அறிவிக்க இல்லை. கடைசி வரை அறிவிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 'கட்டப்பா' சஸ்பென்ஸ் போல இந்த சஸ்பென்ஸை பரபரப்பாக வைத்திருப்பதே கவுதம் மேனனின் திட்டமாம் இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானா அல்லது ஹாரீஸ் ஜெயராஜா என ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் இந்த படத்திற்கு இசை கவுதம் மேனனே என்றும் படத்தின் இசை சக்ஸஸ் ஆனால்