குறிச்சொல்: nandhan

பள்ளி பருவத்திலே: திரைவிமர்சனம்

பள்ளி பருவத்திலே: திரைவிமர்சனம்

சற்றுமுன், விமர்சனம்
பள்ளி பருவத்திலே என்று டைட்டில் மட்டும்தான் வைத்திருக்கின்றார் என்று நம்பிக்கை வைத்து படத்திற்கு போனால் படத்தில் பணிபுரிந்த அனைவருமே ஸ்கூல் பசங்க படம் எடுப்பது மாதிரியே எடுத்துள்ளார். கொஞ்சம் 'பசங்க', கொஞ்சம் 'சாட்டை', கிளைமாக்ஸில் 'காதல்' என படம் முழுவதும் பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. ஒரே ஒரு காட்சி கூட படத்தில் சுவாரஸ்யமாக இல்லை என்பது பெரும் சோகம் இந்த படத்தின் கதையை பற்றி கூற ஒன்றுமே இல்லை. பள்ளியில் படிக்கும் ஹீரோ நந்தனும், ஹீரோயின் வெண்பாவும் காதலிக்கின்றனர். வழக்கம் போல் காதலை மனதிற்குள் ஹீரோயின் பூட்டி வைக்க, ஹீரோ மட்டும் புரபோஸ் செய்கிறார். சொல்லி வைத்தால் போல் வெண்பாவின் தந்தையும் சித்தப்பாவும் ஹீரோவை மிரட்டிவிட்டு வெண்பாவுக்கு ஒரு அப்பாவி மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். அதன் பின்னர் படம் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை ஹீரோ நந்தன
மகனை காப்பாற்ற அவசர உதவி கேட்ட சுஹாசினி! என்ன ஆச்சு?

மகனை காப்பாற்ற அவசர உதவி கேட்ட சுஹாசினி! என்ன ஆச்சு?

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களின் ஒரே மகன் இத்தாலியில் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மகனின் பணம், டெபிட், கிரெடிட் கார்ட் உள்பட முக்கிய பொருட்கள் திருட்டு போய்விட்டதாம் இதுகுறித்த தகவல் அறிந்ததும் பதட்டமான நடிகை சுஹாசினி உடனே தனது டுவிட்டரில் இத்தாலியில் உள்ள வெனிஸ் சதுக்கத்தில் யாராவது இருந்தால் தயவுசெய்து என மகனுக்கு உதவுங்கள் என்று டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த டுவீட்டை பார்த்த இத்தாலி தமிழர்கள் நந்தனுக்கு உதவி செய்துள்ளனர். இதற்கு நன்றி கூறிய சுஹாசினி, தன்னுடைய மகன் பாதுகாப்பாக இருப்பதாக இன்னொரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். மணிரத்னத்தின் ஒரே மகனிடம் திருட்டு நடந்துள்ளது குறித்து இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.