குறிச்சொல்: Nandhini

நந்தினி சீரியலில் மிரட்டும் காயத்ரி ஜெயராமன்..

நந்தினி சீரியலில் மிரட்டும் காயத்ரி ஜெயராமன்..

சின்னத்திரை
நந்தினி தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார் காயத்ரி ஜெயராமன். பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘மனதை திருடி விட்டாய்’ படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன் பின், ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்பு அமையாததால் சினிமாவிலிருந்து விலகினார். அதன் பின், ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங்கில் தனது கவனத்தை செலுத்தினார். அந்தமான் பகுதியில் ஸ்கூபா டைவிங் சொல்லித் தரும் மாஸ்டர் ஆனார். அப்போது, தன்னுடைய சக பயிற்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்தமானிலேயே செட்டில் ஆனார். அந்நிலையில், அவருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை
நான் தற்கொலை செய்து கொண்டால்? – நடிகை நந்தினி கண்ணீர் பேட்டி

நான் தற்கொலை செய்து கொண்டால்? – நடிகை நந்தினி கண்ணீர் பேட்டி

சின்னத்திரை, செய்திகள்
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலாமான நடிகை  ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவர் மரணமடைவதற்கு முன் தன்னுடைய தற்கொலைக்கு தன்னுடைய மாமனார் (நந்தினியின் தந்தை) ராஜேந்திரனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். எனவே, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நந்தினியும் அவரது தந்தையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். எனவே, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு நந்தினி அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த வழக்கில் முன் ஜாமீன் அவசியம் இல்லை என நீதிபதி கூறிவிட்டார். இதில் மேல் முறையீடு செய்ய என்னிடம் பணம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும்
எனது மூன்று குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன்-நந்தினி உருக்கம்

எனது மூன்று குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன்-நந்தினி உருக்கம்

சின்னத்திரை, செய்திகள்
விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர்  நந்தினி.  இவரது கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் எனது மரணத்திற்கு நந்தினியின் அப்பாதான் காரணம் என்று எழுதியிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.  இதையடுத்து நந்தினி மற்றும் அவரது தந்தையை  போலீஸார் விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் கூறியபோது,  எனது கணவர் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. எனது கணவரின் முகத்தைக்கூட பார்க்கவிட வில்லை. சுடுகாட்டில்தான் அவரது முகத்தை பார்த்தேன். எதற்காக என்னையும் எனது குடும்பத்தினரின் மீதும் வீண்பழியை சுமத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. என்னுடைய அப்பா,அம்மா மற்றும் தம்பி ஆகிய மூன்றுபேரும் எனக்கு குழந்தைகள். அந்த குழந்தைகளுக்காக நான் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. மீடியாவில் பணியாற்
எனது கணவர் இறக்கவில்லை – கதறும் ‘மைனா’ நந்தினி

எனது கணவர் இறக்கவில்லை – கதறும் ‘மைனா’ நந்தினி

சற்றுமுன்
தனது கணவர் கார்த்திக் இன்னும் இறக்கவில்லை எனவும், இன்னமும் அவரை நான் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என விஜய் டிவி புகழ் மைனா நந்தினி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரம் சின்னத்திரையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கார்த்திக்கை நானனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.  அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 80 லட்சத்திற்கும் மேல் அவர் பணம் வாங்கியிருந்தார் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாய்? என நான் கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். ஆனால் கூறியபடி, அவர்கள் யாருக்கும் அவர
‘நந்தினி’ தொடர் உங்களுக்கு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் – ராஜ்கபூர்

‘நந்தினி’ தொடர் உங்களுக்கு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் – ராஜ்கபூர்

சின்னத்திரை
சன் தொலைக்காட்சியில் திங்கள்-சனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நந்தினி தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரை சினிமா இயக்குனர் ராஜ்கபூர் இயக்கி வருகிறார். மேலும், திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. இதன் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், கன்னடத்தில் நேரிடையாக எடுக்கப்படும் இந்த தொடர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தாலாட்டு கேட்குதம்மா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், அவள் வருவாளா உள்ளிட்ட 20 படங்களை இயக்கிய ராஜ்கபூர், இந்த தொடரை இயக்குவது பற்றி கூறியபோது “நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன். ஆனால், நந்தினி தொடர் உங்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். இந்த தொடரில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான். ஒரு பாம்பிற்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டைதான் இந்த தொடரின் கதையாகும்” எனக் கூறியுள்ளார்.