குறிச்சொல்: nayanthara next movie news

ஓட்டபந்தயத்துக்கு தயாராகும் நயன்தாரா

ஓட்டபந்தயத்துக்கு தயாராகும் நயன்தாரா

சற்றுமுன்
இப்பொழுதெல்லாம் ஹீரோக்களிடம் டூயட் பாடும் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டார் நயன்தாரா. நல்ல கதைகளை தேர்வு செய்து குறிப்பாக தானே ஹீரோவாகவும் பிரதிபலிக்கும் வேடங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். அவ்வாறு அவர் தேர்வு செய்து வெளியான படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. மாயா,டோரா உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம். இந்த நிலையில் தற்போது அவர் ஓட்டபந்தயத்திற்கு தயாராவதாக கூறப்படுகிறது. அதாவது அடுத்து அவர் நடிக்கும் படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை வேடமாம். அதற்காக தன்னை தயார் படுத்திவருகிறாராம். இந்த படத்தை ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஆனால் இந்த செய்தி நயன்தாரா தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.