ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: neet

எனக்கு அரசியல் பிடிக்காது; எனது பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்: ராகவா லாரன்ஸ் பளீச்

எனக்கு அரசியல் பிடிக்காது; எனது பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்: ராகவா லாரன்ஸ் பளீச்

சற்றுமுன், செய்திகள்
ராகவா லாரன்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருந்தார். கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்விகளை எழுப்பினர். அப்போது, அவர் கூறும்போது, அனிதாவின் தற்கொலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை விமர்சிப்பவர்ளுக்கு காலம் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டு சென்றார். ஆனால், அவர் பாரதீய ஜனதா கட்சியை விமர்சித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘எனது ‘முனி 4’ படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்க
மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வினால் மருத்துவக் கனவு நிறைவேறாத மனஉளைச்சலில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், அனிதாவின் இறுதிச்சடங்குக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், இரங்கல் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.   இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், அனிதா குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அனிதாவின் புகைப்படத்துக்கு கீழே சக உறவினர்போல தரையில் அமர்ந்து அனிதாவின் அப்பாவுக்கு ஆறுதல் கூறி
தமிழிசையை யாரும் விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூர்யா நற்பணி மன்றம் வேண்டுகோள்

தமிழிசையை யாரும் விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூர்யா நற்பணி மன்றம் வேண்டுகோள்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் சூர்யா கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று பதிலளித்திருந்தார். இதனையடுத்து, தமிழிசை சவுந்தரராஜானை சூர்யா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அண்ணன் சூர்யா அவர்கள் நீட் தேர்வை பற்றி தமிழ் இந்து நாளேட்டில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார். அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்த
தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லையே என்ற மன உளைச்சலில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவுக்கு நினைவேந்தல் ஒன்றை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, அமீர், பா.ரஞ்சித், பிரம்மா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ராம்,  மீரா கதிரவன் உள்ளிட்ட பல இயக்குனர்களும் மேலும் பல உதவி இயக்குனர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விழாவில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திய வேலூர் சி.எம்.சி. கல்லூரி நிர்வாகத்துக்கு இயக்குனர் அமீர் நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘சாதிகள் தற்போது ஒழிந்து வருகின்றன. இதனால், சாதிகள் இல்லாத சமூகத்தை நாம் அடைந்து வருகிறோம். சாதிகளை கலைந்து தமிழராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழன் என்பதில் நாம் பெருமிதம்
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச
இப்படியும் ஒரு தலைவரா?-விஜயகாந்தை பாராட்டும் மக்கள்

இப்படியும் ஒரு தலைவரா?-விஜயகாந்தை பாராட்டும் மக்கள்

சற்றுமுன், செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடுகாட்டிற்கே சென்ற சம்பம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் நேற்று போராட்டம் வெடித்தது. 900 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர். அனிதாவின் உடலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் நேற்று முந்தினம் இரவு 10 மணிக்கு மேல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று பக்ரித் விழாவில் கலந்து கொள்ள வாணியம்பாடிக்கு வந்த விஜயகாந்த், அங்கிருந்து 7 மணிக்கு மேல்தான் அரியலூருக்கு கிளம்பியுள்ளார். இதற்கு மேல் போனால் சரியான நேரத்தில் நீங்க
அனிதாவின் மரணம் வேதனையைத் தருகிறது: ரஜினி

அனிதாவின் மரணம் வேதனையைத் தருகிறது: ரஜினி

சற்றுமுன், செய்திகள்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு நீட் என்னும் வடிவில் வந்த எமன் அவரது உயிரை பறித்துவிட்டான். பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் தனக்கு மருத்துவ படிப்பு கனவு வீணாகிவிட்டதே என்ற விரக்தியில் இருந்தவர், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து போராடினார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு கருணை வழங்க மறுத்துவிட்டது. முடிவு, இன்று அனிதா மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனிதாவின் இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அனிதாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுக
கமல் டுவீட்டுக்கு முதல்முறையாக கிளம்பிய எதிர்ப்பு

கமல் டுவீட்டுக்கு முதல்முறையாக கிளம்பிய எதிர்ப்பு

சற்றுமுன், செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசனின் டுவீட் என்றால் கட்சி சாராத அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் கருத்தாழம் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் தமிழக அரசை நேரடியாக எதிர்க்க தொடங்கியவுடன் அவரது டுவீட்டுகளில் அனல் பறந்தது. ஆனால் எந்த கட்சியையும் சாராமல் டுவீட் செய்து கொண்டிருந்த கமல், திடீரென திமுக ஆதரவு பத்திரிகையான 'முரசொலி' பவளவிழாவில் கலந்து கொண்டதும், அதில் தற்காப்பு, தன்மானம் என ரஜினியை மறைமுகமாக தாக்கியதும் அனைவரையும் நெருடல் அடைய செய்தது. இந்த நிலையில் நேற்றிரவு 'நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்' என்று கமல் டுவிட்டரில் கூறியுள்ளார். இதே கமல்ஹாசன் தான் கடந்த மாதம் 'பள்ளிப் படிப்பை கூட முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை' என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அப்படியி