ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: neeyum naanum naduvula peyum

புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்?

புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்?

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, கதாநாயகனாக நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அதையடுத்து ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலுடன் நடித்து காமெடியனாக தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆர்.கே. நடிப்பில் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்திலும் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், விஜய்யுடன் ‘மெர்சல்’, கதாநாயகனாக ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ ஆகிய படங்களில் தொடர்ந்து பிசியானதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ஆர்.கே. நடிக்கும் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளா
வில்லனாக மாறிய வடிவேலு

வில்லனாக மாறிய வடிவேலு

சற்றுமுன், செய்திகள்
காமெடியில் கலக்கி வந்த வடிவேலுவுக்கு இம்சை அரசன் கதா நாயகன் அந்தஸ்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பின்பு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் தோல்வியை தழுவியது. இந்த சூழ் நிலையில் அரசியல் ஆசை வடிவேலுக்கு வர திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு பின்பு நடந்த கதை எல்லாம் நாம் அறிந்ததுதான். அனாலும் கதா நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த அவருக்கு எலி,தெனாலி ராமன் ஆகிய படங்கள் மண்ணை வாரி போட்டது. தற்போது தனது முடிவை மாற்றிய வடிவேலு காமெடி வேடங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் ஆர்.கே நடிக்கும்  நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வழக்கான காமெடி வேடம் இல்லை இவருக்கு. வில்லத்தனம் செய்யும் காமெடியனாக நடித்து வருகிறார். தனது கெட்டப்பையும் இப்படத்திற்காக மாற்றியுள்ளார். ஏற்கெனவே இவர்கள் இருவரும் நடித்த எல்லாம் அவன் செயல் நல்ல வரவேற்பை பெ