குறிச்சொல்: Netflix

உன் மூஞ்சியெல்லாம் யாராவது காசு கொடுத்து பார்ப்பாங்களா? சித்தார்த்

உன் மூஞ்சியெல்லாம் யாராவது காசு கொடுத்து பார்ப்பாங்களா? சித்தார்த்

சற்றுமுன், செய்திகள்
சித்தார்த் நடித்த 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ்-இல் வெளியாகியுள்ளது இந்த தகவலை சித்தார்த் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்தார். அதற்கு ஒரு ரசிகர் எங்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்க கவலை ஏன்? என்று பதிலளித்துள்ளார். இதனால் கொந்தளித்த சித்தார்த், 'உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. நீ பாரு' என்று கோபமாக பதிலளித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இன்றும் தொடர்கிறது பாகுபலியின் வசூல் சாதனை

இன்றும் தொடர்கிறது பாகுபலியின் வசூல் சாதனை

சற்றுமுன், செய்திகள்
எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்திய சினமாவை உலக அரங்கில் பேச வைத்து, இந்தயாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் வசூலில் சாதனைப் படைத்த படம் பாகுபலி 2 என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் படத்தின் சாதனைகள் இதோடு முடியவில்லை. வெளியாகி 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை இந்தப் படம் பல வழிகளில் பல வசூல்களை ஈட்டி வருகிறது. இணையவழி வீடியோக்களைத் திரையிடும் உலகின் 9 ஆம் இடத்தில் உள்ள ‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம்சமீபத்தில் பாகுபலி படத்தை தனது பயன்பாட்டில் திரையிடுவதற்கான உரிமையை 25.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.  சமீப காலமாக தங்கல், பாகுபலி போன்ற இந்திய படங்கள் உலகத்திரையரங்குகளில் திரையிடப்படுவது மற்றும் மேற்கத்தியர்கள் நம் படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாலும்‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம் இந்தியா திரைப்படங்கள் மீது முதலீடு செய்ய ஆர்