வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22

குறிச்சொல்: new movie

ரஜினிக்கு செட் ஆகுமா வெற்றிமாறன் மேக்கிங்?

ரஜினிக்கு செட் ஆகுமா வெற்றிமாறன் மேக்கிங்?

சற்றுமுன், செய்திகள்
ரஜினிகாந்த் தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி தொடந்து படங்களில் நடிப்பாரா அல்லது அரசியல் பிரவேசமா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காலா படப்பிடிப்பின்போது இயக்குனர் வெற்றி மாறன் ரஜினியிடம் கதை ஒன்றை சொன்னதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த தகவல் உண்மை என்றே சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் தனுஷ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ரஜினியை பொறுத்தவரை அவருக்கென்று தனி ஸ்டைல்  உண்டு. ரஞ்சித் கூட கபாலி படத்தில் அவருக்கான அந்த ஸ்டைலை வைத்தே கையாண்டிருப்பார். வெற்றி மாறன் ஒரு சிறந்த இயக்குனர் என்பது மறுப்பதற்கில்லை. அவரது பொல்லாதவன்,ஆடுகளம் போன்றவை சிறந்த உதாரணங்கள். இதுவரை அவர் தனுஷை தவிர பெரிய நடிகர்கள் எவரையும் இயக்கியதில்லை. வெற்றிமாறனுக்கென்று ஒரு மேக்கிங் ஸ்டைல் உண
புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ்யுடன் இணையும் அதர்வா

புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ்யுடன் இணையும் அதர்வா

சற்றுமுன், செய்திகள்
புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இயக்குனர் ஸ்ரீகணேஷ்க்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை தொடர்ந்து அதர்வாவை வைத்து படம் இயக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதர்வா தற்போது ”செம போத ஆகாதா” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ்யுடன் நடிப்பார் என தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.அதேபோல இப்படத்தை கூறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாளை வெளியாகும் முத்துராமலிங்கம்!!!

நாளை வெளியாகும் முத்துராமலிங்கம்!!!

Uncategorized
டைரக்டர் ராஜாதுரை இயக்கதில் கெளதம் கார்த்திக் நடிக்கும் படம் முத்துராமலிங்கம். இந்த படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த் உள்ளனர். இந்த படம் இளையராஜா இசையில் நாளை வெளியாக உள்ளது.மேலும் இந்த படத்தில் இப்படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நெப்போலியனுக்கு மகனாக நடித்துள்ளார்.இப்படம் சிலம்பாட்ட கலையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நெப்போலியனுக்கு ஏற்கனவே சிலம்பாட்ட அனுபவம் உள்ளத்தால் எளிதாக நடித்துள்ளார்.இந்த படத்திற்காக கெளதம் கார்த்திக் 40 நாட்கள் முறைப்படி சிலம்பாட்ட பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் சிலம்பாட்டம் தொடர்பாக எட்டு சண்டை காட்சிகள் உள்ளதாம்.