குறிச்சொல்: new poster

ஆளப்போறான் தமிழன்! மெர்சல் புதிய போஸ்டரால் பரபரப்பு

ஆளப்போறான் தமிழன்! மெர்சல் புதிய போஸ்டரால் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் சில நிமிடங்களுக்கு வெளியாகியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த போஸ்டரில் 'ஆளப்போறான்' தமிழன் என்று தொடங்கும் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளதாக ஆயிரக்கணக்கான டுவீட்டுக்கள் பதிவாகி உள்ளதில் இருந்து தெரிய வருகிறது. மேலும் 'ஆளப்போறான்' தமிழன் என்ற வரியுடன் பாடல் தொடங்குவதால் விஜய்யின் அரசியல் களம் விரைவில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு போஸ்டரே சமூக வலைத்தளத்தை சுனாமி போல் சுழன்றடிக்க செய்தால் இந்த படம் வெளியாகும் தினத்தில் என்ன நடக்கும் என்பதை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் சிங்கிள் பாடல் அறிவிப்பின் நேரம் திடீர் மாற்றம்

விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் சிங்கிள் பாடல் அறிவிப்பின் நேரம் திடீர் மாற்றம்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது திடீரென அந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஆம், மாலை 5 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகவிருப்பதாகவும், அந்த போஸ்டரில் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் என்றும் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி மற்றும் போஸ்டர் டிசைனர் பிரசன்னா ஆகியோர் தங்கள் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர். எனவே விஜய் ரசிகர்களே இன்னும் அரை மணி நேரத்தில் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்