செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

குறிச்சொல்: news

ரஜினி படத்துக்கு எதிராக வதந்தி… தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்

ரஜினி படத்துக்கு எதிராக வதந்தி… தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
ரஜினி படத்துக்கு எதிராகக் கிளம்பிய வதந்தியை, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வருட தீபாவளி ரிலீஸுக்குத் திட்டமிட்ட படம், நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடியாது என்றும், எனவே ஜனவரியிலும் படம் ரிலீஸாகாது என்றும் தகவல் பரவியது. இந்தத் தகவலை, தயாரிப்பாளரான ராஜு மகாலிங்கம் மறுத்துள்ளார். ‘பல நாடுகளில் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதால், அறிவித்தபடி படம் ரிலீஸாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்  
கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான்  – பிரபாஸ்

கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான் – பிரபாஸ்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பலரின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ்.  உலக அளவில் வரலாறு காணாத வெற்றியை இப்படம் பெற்றதற்கு காரணம் SS ராஜமௌலியின் பிரமாண்டமான இயக்கமும், பிரபாஸின் துணிச்சலான நடிப்பும் தான் . பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸிற்கு ரசிகர் கூட்டம் கூடியது, பல பெண்களின் கனவு நாயகனாகவும் இவர் திகழ்கிறார். அத்திரைப்படத்தில் அவர் பேசிய சில வசனங்கள் பெண்களின் மனதை மிகவும் கவர்ந்தது. பாகுபலி  பாகம் இரண்டிற்கு பிறகு பிரபாஸிற்கு 6000 வரன்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனிடையில் பாகுபலியில்  ஜோடியாக தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் இடையில் காதல் கனிந்துள்ளது என பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் பில்லா , மிர்ச்சி , பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளனர். இந்த நிலையில்  பிரபாஸிடம் தன திருமணத்தை குறித்து விசாரித்தபோது. "என் ரசிகர்கள் என் திருமணத்தை பற்றி தற்போதைக்கு