ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: ops

துணை முதல்வரை சந்தித்தது ஏன்? நடிகை வரலட்சுமி விளக்கம்

துணை முதல்வரை சந்தித்தது ஏன்? நடிகை வரலட்சுமி விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நடிகை வரலட்சுமி நேற்று சந்தித்தார். கடந்த இரண்டு நாட்களாக விஷால் வேட்புமனு விவகாரம் பெரும் பரபரப்பில் இருக்கும் நிலையில், விஷாலின் காதலி என்று கூறப்படும் வரலட்சுமி திடீரென துணை முதல்வரை சந்தித்தது பல்வேறு ஊகங்களை எழுப்பியது. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டி வலியுறுத்தவே தான் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்ததாக வரலட்சுமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் மேலும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களையும் சந்தித்து இதே கோரிக்கையை வைத்ததாகவும் அவர் கூறினார்., நடிகை வரலட்சுமி திரையுலகில் உள்ள பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அரசியலில் வெல்ல என்ன செய்யவேண்டுமென்று கமலுக்கு தெரியும்: அமைச்சர்கள் முன்னால் தைரியமாக பேசிய ரஜினி

அரசியலில் வெல்ல என்ன செய்யவேண்டுமென்று கமலுக்கு தெரியும்: அமைச்சர்கள் முன்னால் தைரியமாக பேசிய ரஜினி

சற்றுமுன், செய்திகள்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார். விழாவில், அமைச்சர் பெருமக்களும், திரையுலகை சேர்ந்த எண்ணற்ற திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அனைவரும் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி பேசும்போதும், சிவாஜி மணிமண்டபத்தை திறந்துவைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி. அவர் இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்ததன் மூலம் அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சிவாஜி என்ற கலைஞன் சுதந்திர போராட்ட வீரர்களை நம் கண்முன் நிறுத்தியவர். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருக்கும்போது அதிகமான ஆன்மீக படங்களில் நடித்தவர் சிவாஜி. ஆனால், சிவாஜி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்தது அந்த மக்களுக்கு நேர்
சிவாஜிகணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதித்தே ஆகவேண்டும், கெஞ்ச வேண்டியதில்லை: கமல் ஆவேசம்

சிவாஜிகணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதித்தே ஆகவேண்டும், கெஞ்ச வேண்டியதில்லை: கமல் ஆவேசம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் ஆந்திரா மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளது. இந்த மணிமண்டபத்தை சிவாஜிகணேசனின் பிறந்தநாளான (அக்.1) இன்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி, கமல், நாசர், விஷால், கார்த்தி, விஜயகுமார், சரத்குமார், சூர்யா, சத்யராஜ், நடிகை ராதிகா, மற்றும் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த பிரபு, ராஜ்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மேலும், பெருந்திரளான ரசிகர் பெருமக்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் கமல் பேசும்போது, சிவாஜிகணேசன் மாநில, தேசிய, ஆசிய எல்லைகள் கடந்து புகழ் பெற்றவர். யாரையும் மிரட்டியோ, கெஞ்சியோ சிவாஜியை மதிக்கவேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை. எத்தனை அரசுகள
காறி துப்பினாலும் துடைச்சிட்டு போய்ட்டே இருப்பேன். நாஞ்சில் சம்பத்

காறி துப்பினாலும் துடைச்சிட்டு போய்ட்டே இருப்பேன். நாஞ்சில் சம்பத்

சற்றுமுன்
அதிமுகவின் சர்ச்சைக்குரிய தலைவர், காமெடி தலைவர் என்ற பெயரை மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியில் எடுத்தவர் நாஞ்சில் சம்பத். இவருடைய பேச்சுக்களை கலாய்ப்பது என்பது மிமி கிரியேட்டர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு இந்த நிலையில் இன்று சன் டிவியில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் வலிய வந்து மிமி கிரியேட்டர்களிடம் சிக்கியுள்ளார். இவர் எந்த அளவு சின்னாபின்னாமாகவுள்ளார் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் கூறியதாவது: சசிகலாவும், தினகரனும் மட்டுமே என்னுடைய தலைவர்கள். டிடிவி தினகரன் நன்றாக இருந்தால்தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நன்றாக இருக்கும். கடைசி வரை தினகரன் பக்கமே இருப்பேன். என் முடிவை யாராவது கேலி செய்து காறித்துப்பினாலும் துடைத்து கொண்டு போய்க்கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஓ.,பன்னீர்செல்வம் முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட