குறிச்சொல்: oviya

பிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை

பிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கி கிடைத்த வரவேற்ப்பை அடுத்து சீசன் 2 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதோ விடை கிடைத்துவிட்டது. அனேகமாக ஜூன் மாதம் பிக்பாஸ் 2 தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம். காரணம் அவரது அரசியல் ஓட்டு வேட்டைக்கு பிக்பாஸ் களம் ஒரு அருமையான வாய்ப்பு என்பதை உணராதவரா அவர்.   இந்த 2வது சீசனில் யார் யார் பங்கு பெறுவார்கள் என்று தெரியுமா?. ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் தொலைக்காட்சி நிர்வாகம் பேசி வைத்துள்ளனராம். ஆனால் அவர்களிடமிருந்து பாசிட்டிவான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சீசன் 1ல் பங்கு பெற்றவர்களில் ஓவியா மட்டும் உள்ளே வருவார் என்று தெரிகிறது.
ஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்!

ஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்!

சற்றுமுன், செய்திகள்
களவாணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஒவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆரவ் மீது காதல் கொண்ட ஒவியா அதன்பின் அதிலிருந்து வெளியேறினார்.இந்நிலையில் ஆரவ் ஒவியாவை ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆரவ்வுக்கும் ஒவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த காதலை ஆரவ் மறுத்தார். ஒவியாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனமுடைந்து இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்த விஷயம் மெல்ல மெல்ல மறுக்கபட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவ்வும், ஒவியாவும் எப்போதும் போல சகஜமாக பேசி வருகிறார்கள். ஒவியாவுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க நடித்து வருகிறார். ஆரவ் ஒவியாவை ஏன் பிடிக்கும்
நயன்தாராவை முந்திய ஓவியா

நயன்தாராவை முந்திய ஓவியா

சற்றுமுன், செய்திகள்
  ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பிடித்த நடிகை என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வரும். 2017ஆம் ஆண்டில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாக ஒவியா தோ்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை நடத்தியதில் ஒவியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். களவாணி படத்தின் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்த ஒவியா, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த ரசிகா்களை தன் பக்கம் இழுத்து சென்றார். அந்த நிகழ்ச்சியில் ஒவியாவின் வெகுளித்தமான செயல்பாடுகள், தைரியமாகவும் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் திறன் ஆகியவற்றை கொண்டு ரசிகா்களை கவா்ந்தார். ஒவியாவுக்கென்று ஒவியா ஆர்மி, ஒவியா புரட்சிபடை போன்றவை உருவாகின. 2017ம் ஆண்டு அனைவராலும் விரும்பப்பட்ட பெண் யார் என்ற கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை ரசிகா்களிடையே நடத்தியத்தில் ஒவியா முதலிடத்தை பெற்றார். ரசிகா்களின் கனவுகன்னி
காதலர் தினத்தில் ஓவியா-சிம்புவின் முக்கிய அறிவிப்பு

காதலர் தினத்தில் ஓவியா-சிம்புவின் முக்கிய அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில நாட்களுக்கு முன் சிம்புவின் இசையில் ஓவியா ஒரு பாடலை பாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதன்முதலாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளனர். அனிதா உதீப் என்ற இயக்குனர் இயக்கவுள்ள 90ml என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் ஓவியா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இதனை உறுதி செய்துள்ளது. நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர். இந்த படம் ஒரு லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.
பிரபல நடிகைகளின் காலண்டர் புகைப்படங்கள்

பிரபல நடிகைகளின் காலண்டர் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
2018ஆம் ஆண்டின் காலண்டர் புகைப்படங்களில் பிரபல நடிகைகள் சமீபத்தில் போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்  
பக்கத்து தெருவில் வசிப்பவருக்கு ஜோடியான ஓவியா

பக்கத்து தெருவில் வசிப்பவருக்கு ஜோடியான ஓவியா

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்தநிலையில் அவருக்கு மலையாள பட வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது. இந்த படத்தில் அன்சன் பால் என்பவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளாராம். அன்சன் பால் என்பவர் ஓவியாவின் சொந்த ஊரான திருச்சூரை சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அவருடைய பக்கத்து தெருவை சேர்ந்தவராம். மேலும் இந்த அன்சல் பால் தான் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தில் கீர்த்திசுரேஷூக்கு மாப்பிள்ளையாக நடித்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சிம்பு-ஓவியா திருமணமா? அதிர்ச்சி தகவல்

சிம்பு-ஓவியா திருமணமா? அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்புவது கோலிவுட் திரையுலகில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. நயன்தாரா, ஹன்சிகா என சிம்புவின் காதல் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக ஓவியாவும் சிம்புவும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுநம்ம ஆளு' படத்தின் ஸ்டில்லில் நயன்தாராவின் தலையை எடுத்துவிட்டு ஓவியாவின் தலையை ஒட்டியுள்ளார் ஒரு நெட்டிசன். அதிலும் போட்டோஷாப் தொழிலுக்கு புதுசுபோல, எல்கேஜி குழந்தை கூட இது மார்பிங் செய்த போட்டோ என்று கூறும் வகையில் ஒரு புகைப்படத்தை தயார் செய்து வைரலாக்கியுள்ளார். இது போலி புகைப்படம் என்று தெரிந்தே பலர் இந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடிய ஓவியா: வைரலாகும் வீடியோ

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடிய ஓவியா: வைரலாகும் வீடியோ

சற்றுமுன், செய்திகள்
இந்த ஆண்டின் இரண்டு முக்கிய வைரல் பிக்பாஸ் ஓவியா மற்றும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடிய ஷெரில் இந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் பாடலின் டியூனில் சரவணா ஸ்டோரின் புதிய விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பாடலில் ஓவியா நடனம் ஆடியுள்ளார். இந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஓவியா ஆர்மியினர் இந்த பாடலை அதிகளவில் ஷேர் செய்து வருவதால் இந்த பாடல் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது. https://twitter.com/OviyaaTweetz/status/946699497438044160
சுந்தர் சியின் ‘கலகலப்பு 2’ படத்தின் கலர்புல் டீசர்

சுந்தர் சியின் ‘கலகலப்பு 2’ படத்தின் கலர்புல் டீசர்

சற்றுமுன், வீடியோ
சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது கலகலப்பு 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=wiF-WlWS3dE