குறிச்சொல்: Pa Ranjith

காலா டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு

காலா டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு

Uncategorized
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்காத்துடன் இன்று 'காலா' டீசரை வரவேற்க தயாராக இருந்தனர். இந்த நிலையில் தனுஷ் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை ஒத்திவைத்துள்ளதாக எறு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யா அவர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ‘காலா’ படத்தின் டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த டீசர் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும். ‘காலா’ டீசரை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடம், இந்த தள்ளிவைப்புக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது  
இணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்

இணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்

சற்றுமுன், செய்திகள்
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி இணைந்து ‘காலா’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறது. மும்பை தாதாவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் தொடங்கி, சென்னை, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி தனது குடும்பத்தோடு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான போதும் சமூக வலைத்தளத்தில் அதிகமான வரவேற்பு இருந்தது. அதேபோல், இந்த புகைப்படத்துக்கும் நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘காலா’ படத்தில் ஹுமா குரேஷி, சமுத்திரகனி, அஞ்சலி பாட்டீல், நானா படேகர், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண
தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லையே என்ற மன உளைச்சலில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவுக்கு நினைவேந்தல் ஒன்றை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, அமீர், பா.ரஞ்சித், பிரம்மா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ராம்,  மீரா கதிரவன் உள்ளிட்ட பல இயக்குனர்களும் மேலும் பல உதவி இயக்குனர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விழாவில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திய வேலூர் சி.எம்.சி. கல்லூரி நிர்வாகத்துக்கு இயக்குனர் அமீர் நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘சாதிகள் தற்போது ஒழிந்து வருகின்றன. இதனால், சாதிகள் இல்லாத சமூகத்தை நாம் அடைந்து வருகிறோம். சாதிகளை கலைந்து தமிழராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழன் என்பதில் நாம் பெருமிதம்