குறிச்சொல்: pandiraj

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த அடுத்த படம்

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த அடுத்த படம்

சற்றுமுன், சின்னத்திரை
கடந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினாவில் நடத்திய புரட்சி காரணமாக கோலிவுட்டிலும் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. கருப்பன், மதுர வீரன் ஆகிய படங்களை அடுத்து தற்போது பாண்டியராஜ் தயாரிப்பில் 'மெரினா புரட்சி' என்ற தலைப்பிலும் ஒரு படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்./ எம்.எஸ்.ராஜ் இயக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள நடிகர் கார்த்தி, நல்ல கதை அமைந்தால் விரைவில் சிங்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன. ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் திரையுலக வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க பல இயக்குனர்கள் முயன்று வரும் நிலையில் இந்த முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் பிரபல இயக்குனர் பாண்டிராஜ், ஆம், சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விஷாலுடன் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு த