குறிச்சொல்: papanasam esther

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பொிய காக்கமுட்டை

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பொிய காக்கமுட்டை

சற்றுமுன், செய்திகள்
தேசிய விருது பெற்ற படமான காக்கா முட்டை அனைவரது வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கிவிருந்தாா். அதில் கிராமத்து பெண்ணாக ஜஸ்வா்யா ராஜேஷ் நடித்து இருப்பாா்.அதுவும் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தாா். காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமடைந்தவா்கள் அந்த குழந்தைகள்.  அதில் பொிய காக்கா முட்டை விக்னேஷ், சின்ன காக்கா முட்டை ரமேஷ் நடித்து இருந்தனா். தற்போது இவா்கள் படங்களில் நடித்து வருகின்றனா்.  அது மட்டுமில்லங்க!! மாஸ் நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்து கொண்டிருக்கும் அறம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா்கள். பொிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாா். அறிமுக இயக்குநா் இயக்கவுள்ள படத்தில் தான் அவா் நடிக்க உள்ளாா். அந்த அறிமுக இயக்குநா் சேரா கலையரசன் இயக்கும் குழலி என்ற படத்தில் தான் ஹீரோவாக தோன்றி நம்மை கலக்க உள்ளாா்.