குறிச்சொல்: Parvathy Omanakuttan

வடிவேலுவுக்கு ஜோடியான அஜித் பட ஹீரோயின்

வடிவேலுவுக்கு ஜோடியான அஜித் பட ஹீரோயின்

சற்றுமுன், செய்திகள்
வடிவேலு நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் மட்டும்தான் வடிவேலு ஹீரோவாக வெற்றியடைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். உடன் லைக்காவும் கை கோர்த்தது. படத்திற்உ இம்சை அரசன் 24ம் புலிகேசி என்று பெயரிபட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. முதல் பாகத்தில் மோனிகா, தேஜாஸ்ரீ ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். இரண்டாம் பாகத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பில்லா2 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.