குறிச்சொல்: photoshoot

விஜய்-ரசிகர்கள் போட்டோஷூட்டில் மனைவியுடன் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்

விஜய்-ரசிகர்கள் போட்டோஷூட்டில் மனைவியுடன் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுக்க அவரது தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் நட்சத்திரங்களும் விரும்புவதுண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் விஜய்யை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரவிகுமாரின் மனைவியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக விஜய்யுடன் அவரது ரசிகர்கள் இணைந்து எடுக்கும் போட்டோஷூட் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான ரவிகுமார் மனைவியுடன் சென்று புகைப்படம் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈசிஆர் பண்ணை வீட்டில் ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

ஈசிஆர் பண்ணை வீட்டில் ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் சென்னையில் நடந்து வரும் நிலையில் இன்று சென்னை ஈசிஆரில் உள்ள 'விஜய் மக்கள் இயக்கம்' அலுவலகத்தில் விஜய் ரசிகர்களுடன் இன்று திடீர் ஆலோசனை செய்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போட்டோஷூட் நிகழ்ச்சியில் மட்டுமே விஜய் கலந்து கொண்டார் என விஜய் ரசிகர் மன்றத்தின் தரப்பில் தெரிவித்திருந்த போதிலும், அவர் முக்கிய ஆலோசனையில் ரசிகர்களுடன் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அவர் எடுக்கவுள்ள ஒரு அதிரடி திட்டத்திற்கான தொடக்கமே இன்றைய ஆலோசனை என்றும் கூறப்படுகிறது. வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் படுஜாலியாக இன்னோவா காரில் வந்திறங்கிய விஜய்யை ரசிகர்கள் பலத்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் புன்சிரிப்புடன் ஒவ்வொரு ரசிகருடனும் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும், பல ரசிகர்களின் கையை பிடித்து அவர்களிடன் அன்புடன் நலம் விசாரித்