குறிச்சொல்: PM

காதல் வேற, இது வேற: அதிர வைத்த தமிழ் நடிகை

காதல் வேற, இது வேற: அதிர வைத்த தமிழ் நடிகை

சற்றுமுன், செய்திகள்
'காதல் கண்கட்டுதே' படத்தில் ஹோம்லியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை அதுல்யா. தற்போது சமுத்திரக்கனி நடித்து வரும் 'ஏமாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் இந்த படத்தில் PM என்ற வார்த்தையை நாயகி அதுல்யா அடிக்கடி பயன்படுத்துகிறார். premarital என்பதன் சுருக்கம்தான் இந்த PM. திருமணத்திற்கு முன் காதலனுடன் எல்லாமும் ஆகி பின்னர் அவனிடம் இருந்து பிரிந்துவிடுவதுதான் இந்த PM. மேலும் இந்த படத்தில் அதுல்யா உச்சகட்ட கிளாமர் காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது காதல் வேற, இது வேற இன்று அதிர வைக்கும் இந்த வசனத்திற்கு படம் வெளிவந்தவுடன் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.youtube.com/watch?v=f0VA3xyt2pM
பிரதமர் மோடியை ஜெர்மனியில் சந்தித்த விஜய் பட நடிகை

பிரதமர் மோடியை ஜெர்மனியில் சந்தித்த விஜய் பட நடிகை

சற்றுமுன், செய்திகள்
இந்திய பிரதமர் மோடி 4 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று டெல்லியில் இருந்து கிளம்பினார். இன்று காலை அவர் ஜெர்மனியை அடைந்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும் விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் நடித்தவருமான ப்ரியங்கா சோப்ரா நடித்த 'பே வாட்ச்' படத்தை புரமோஷன் செய்ய ஜெர்மனி சென்றிருந்தார். பிரதமர் மோடியும் ஜெர்மனி வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்க நேரம் கேட்டபோது அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இன்று காலை மோடி-ப்ரியங்கா சோப்ரா சந்திப்பு ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து ப்ரியங்கா கூறியபோது, 'தனக்காக நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி. எதிர்பாராத இந்த சந்திப்பு தனது மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது' என்று கூறியுள்ளார்